June 30, 2025
தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்கம் சார்பில் மதுரை ஆட்சியரிடம் இலவச வீட்டு மனை பட்டா கோரி மனு

தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்கம் சார்பில் மதுரை ஆட்சியரிடம் இலவச வீட்டு மனை பட்டா கோரி மனு

மதுரை ஜூன் 18-

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்கம் சார்பில் மாநில தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் தலைமையில் கோரிக்க மனு வழங்க பட்டது. அந்த மனுவில் தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள செய்தியாளர்களுக்கு மதுரை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்கத்திற்கு அலுவலக அறை ஒதுக்கீடு செய்து தர வேண்டும். தமிழ்நாடு பத்திரிகையாளர் நல வாரியத்திற்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பது போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு இருந்தது.

மாநில பொதுச் செயலாளர் சமய செல்வம், மாநில துணைத் தலைவர்கள் வல்லத்தரசு, ஜெயராமன், மாநில துணை செயலாளர்கள் பாண்டியன், முருகேசன், மாநில பொருளாளர் புஷ்பராஜன் உட்பட ஏராளமான சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.