
திருச்சி மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் இலால்குடி மாணவிக்கு இரண்டாம் பரிசு
திருச்சி மாவட்ட சதுரங்க சங்கம் மற்றும் பவர்ஃபுல் குயின் செஸ் அகாடமி ஸ்ரீரங்கம் இணைந்து நடத்திய 4-வது திருச்சி மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ வாகிஷா வித்யாஷ்ரம் மேல்நிலை பள்ளி, ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 400 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கு பெற்றனர். இப்போட்டி நான்கு பிரிவுகளில் மாணவ மாணவிகளுக்கு நடைபெற்றது.
இப்போட்டியில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் இலால்குடி வட்டம் கைலாஷ் நகர் சேர்ந்த சிறுமி வி. நேகாஸ்ரீ அவர்கள் யூ 7 (U7) பிரிவில் திருச்சி மாவட்ட அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் இரண்டாம் பரிசினை பெற்றார்.

இவர் இலால்குடியில் உள்ள சாய் வித்யாலயா சி. பி. எஸ். சி பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அனைத்து வகுப்பிலும் கல்வியில் சிறந்த மாணவியாக இருந்து வருகிறார். இளம் வயதிலேயே கல்வி மட்டும் இல்லாமல் பல்வேறு துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இவரது பெற்றோர் முனைவர். இரா. வினோத் மற்றும் திருமதி வி. பிரியா ஆகியோர் அவரின் பயணத்திற்கு உறுதுணையாக இருக்கின்றனர்.

நேகாஸ்ரீ சதுரங்கத்தில் தனி சிறப்பினை காட்டி மாவட்டம் மற்றும் மாநில அளவில் சதுரங்க போட்டிகளில் பங்கு பெற்று பல்வேறு பரிசுகளையும், கேடயங்களையும் பெற்றுள்ளார். இவர் சிறுவயதிலிருந்தே ஓவியத்தில் அதிக ஆர்வம் கொண்டு பள்ளியில் நடைபெற்ற ஓவிய போட்டிகளில் முதலிடம் பெற்றுள்ளார். தற்போது சிலம்பம் கற்றுக் கொண்டு வருகிறார். இவர் கடந்த மாதம் தர்மபுரியில் நடந்த மாநில அளவிலான வளரும் சாதனையாளர் விருது 2025 பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவில் தேசிய சதுரங்க பயிற்சியாளர் திரு. வெங்கட்ராமன், ஸ்ரீ வாகிஷா வித்தியாசம் பள்ளியின் இயக்குனர் திரு.சரண்யன் மற்றும் பவர்ஃபுல் செஸ் அகாடமி நிறுவனர் திருமதி. சித்ரா ராஜகோபால் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினா்.