
AMATEUR HANDBALL ASSOCIATION கைப்பந்து சங்கத்தின் மூலமாக இளையோர் பிரிவுக்கான கைப்பந்து போட்டி நடைபெற்றது.
புதுச்சேரி ஜூன்16
புதுச்சேரி மாநிலத்தில் (AMATEUR HANDBALL ASSOCIATION)கைப்பந்து சங்கத்தின் மூலமாக இளையோர் பிரிவுக்கான கைப்பந்து போட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு விளையாட்டு போட்டியில் கலந்துக் கொண்ட சிறுவர், சிறுமிகளுக்கான சீருடைகளை வழங்கி கைப்பந்து விளையாட்டுப் போட்டியினை தொடங்கி வைத்தார். விளையாட்டில் கலந்து கொண்ட சிறுவர் சிறுமிகளை வாழ்த்தி ஊக்கம் தந்தார். கல்வியுடன் விளையாட்டின் அவசியத்தையும் நல்லொழுக்கத்தையும் அறிவுறுத்தினார்.

வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றம் காண வேண்டும் என்று வாழ்த்தினார். விளையாட்டில் போட்டி இருக்க வேண்டும் ஆனால் பொறாமை இருக்கக் கூடாது என்று சட்டமன்ற* உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் அன்புடன் கேட்டுக் கொண்டார். கைப்பந்து போட்டி தொடக்க விழா முன்னாள் அமைச்சர் காந்திராஜ் அவர்கள், கைப்பந்து சங்கத்தின் பொது செயலாளர் S.நாராயணசாமி அவர்கள் செயலாளர் S.விஜயராஜா அவர்கள் மற்றும் ஆறுமுகம் அவர்கள் முன்னிலையில் போட்டி சிறப்பாக நடைப்பெற்றது .
இந்த போட்டியில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விளையாட்டு போட்டியினை காண வந்திருந்தனர்