
வாடிப்பட்டியில் மாநில அளவிலான கபாடி போட்டிவிடிய விடிய 2 நாட்கள் நடைபெற்றது.
வாடிப்பட்டி, ஜூன்.15-
மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. அயலக அணி மற்றும் மதுரை மாவட்ட அமைச்சூர் கபடி கழகம் சார்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி 102 வது பிறந்தநாள் விழாவையொட்டி மாநில அளவிலான கபாடி போட்டி வாடிப்பட்டி தாதம்பட்டி சின்னதம்பி ரெட்டியார் விவசாய கூடத்தில் செயற்கை ஆடுகளத்தில் நடந்தது. இந்த போட்டிக்கு பேரூராட்சி தலைவர் மு. பால்பாண்டியன் தலைமை தாங்கி துவக்கி வைத்து பரிசுகள் வழங்கினார். ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன், முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அயலக அணி மாவட்ட அமைப்பாளர் கார்த்திக் வரவேற்றார். இந்தப் போட்டியில் ஆண் பெண் இருபால் அணியினர் விளையாடினர். இதில் ஆண்கள் பிரிவில் குருவித்துறை வல்லவன் பார்ட்னர்ஸ் அணி முதல் பரிசம், வாடிப்பட்டி கலைஞர் கருணாநிதி அணி இரண்டாவது பரிசு,
கருமாத்தூர் நேதாஜி ஐ.ஏ.எஸ் .. அகாடமி அணி மூன்றாவது பரிசும்,,சாக்கிலிப்பட்டி அணி நான்காவது பரிசும், மின்னாம்பட்டி அணி ஐந்தாவது பரிசும், முனியாண்டிபுரம், அணி ஆறாவது பரிசும், பொட்டுலுபட்டி அணி ஏழாவது பரிசும், கச்சை கட்டி அணி எட்டாவது பரிசு என ரொக்க பணம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.
அதுபோல் பெண்கள் பிரிவில் மதுரை வி ஸ்குவாடு அணி முதல் பரிசும், மதுரை வெற்றி திருமகள் அணி இரண்டாம் பரிசு,வண்டியூர் மணி வாட்டர் அணி மூன்றாம் பரிசும்,மதுரை காஸ்மோஸ் அணி நான்காம் பரிசு ரொக்க பணம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது. இந்த கபாடி போட்டியில் அரசு போக்குவரத்து கழகம் மண்டல பயிற்சி ஆசிரியர் மலைச்சாமி, ஆசிரியர் வசந்தா, வார்டு நிர்வாகிகள் ராம் மோகன், முருகன், கண்ணன், முரளி, கவுன்சிலர் சரசுராமு,வினோத், விஜி, கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன் ஏற்பாடுகளை அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஏ. எம். கார்த்திக் தலைமையில் விழாகமிட்டியினர் தினேஷ்குமார், சரவணன். கிருஷ்ணகுமார், தீபக்குமார், ராஜ்குமார், கரந்தமலை, கபிலன், மகேஷ்வரன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் ஜி பி பிரபு நன்றி கூறினார்.