
கோவில் கட்டுமானப் பணிக்கான ரூபாய் 10 லட்சத்திற்கான காசோலையை புதுச்சேரி உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி வழங்கியுள்ளார்.
புதுச்சேரி ஜூன் 16
புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட நேத்தாஜி நகரில் .அமைந்துள்ள பெரியப்பளையத்தம்மன் திருக்கோவில் கட்டுமானப் பணிக்கான முதல் தவணையாக ஏற்கனவே ரூபாய் 10 லட்சத்திற்கான காசோலையை மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் பெற்று கோவில் அறநிலையத் துறை அதிகாரி மற்றும் கோவில் நிர்வாகிகளிடம் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் வழங்கியுள்ளார்.
.தற்சமயம் இரண்டாவது தவணையாக ரூபாய் 9.லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலையினை மீண்டும் முதல்வர் அவர்களிடம் பெற்று கோவில் அறநிலையத் துறை அதிகாரி மற்றும் நிர்வாகிகளிடம் வழங்கினார். பின்பு கட்டுமானப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். அச்சமயம் கோவில் நிர்வாகிகள் மீதமுள்ள பணத்தையும் விரைந்து பெற்று தாருங்கள் என்று சட்டமன்ற உறுப்பினரிடம் கேட்டுக் கொண்டார்கள் . அதற்கு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் இதுவரை திருக்கோவில் கட்டுமானப் பணி மேற்கொள்ள கொடுக்கப்பட்ட நிதிக்கான வேலைகளை விரைந்து சிறந்த முறையில் முடித்தால் அடுத்தக்கட்ட நிதிக்கான காசோலையை முதல்வரிடம் பெற்றுத் தருவதாக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் கூறினார். அவருடன் கிளை செயலாளர் காத்தலிங்கம், கருணாநிதி, கணபதி, கணேசன், அசோகன், கதிர், மனோஜ்,ஆகியோர் உடனிருந்தார்கள்.