
மதுரை ஆதீன குருமுதல்வர் திருஞானசம்பந்தப் பெருமான் குருபூசை விழா
மதுரை ஆதீன குருமுதல்வர் திருஞானசம்பந்தப் பெருமான் குருபூசை விழாவின் ஐந்தாம் நாள் நிகழ்வில் மதுரை ஆதீனம் 293 ஆவது குருமகாசந்நிதானம் அவர்களின் திருக்கரங்களால் திருமுறைக் கலாநிதி திருநாவுக்கரசு ஓதுவார் மூர்த்திகள் அவர்களுக்கு திருஞான சம்பந்தப் பெருமான் விருதும் திருவிடைமருதூர் ஜோதீஸ் இராமலிங்கம் அவர்களுக்கு காருக்குறிச்சி அருணாசலம் அவர்களின் பெயரால் நாதஸ்வர வித்வான் விருதும் தமிழ் இலக்கியத்தில் முதல் மதிப்பெண் பெற்ற செந்தமிழ் கல்லூரி மாணவர் அழகு பாண்டி அவர்களுக்கு பசும்பொன் முத்து இராமலிங்கத் தேவர் விருதும் தமிழ் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவர் கு.விஜயராஜ நாதன் அவர்களுக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் விருதும் வழங்கியருளினார்கள் .
இந்நிகழ்விற்கு வருகை தந்த இராமநாதபுரம் சமஸ்தான மன்னர் பரம்பரையின் இளைய மன்னர் ஆதித்ய சேதுபதி அவர்களுக்கும் குருமகாசந்நிதானம் அவர்கள் ஆசி வழங்கியருளினார்கள்.