
ஸ்ரீபெரும்புதூரில் உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ மாணவியர்கள் விழிப்புணர்வு பேரணி
ஸ்ரீபெரும்புதூர் ஜூன் 14
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ மாணவியர்கள் பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு பேரணி

இரத்த தானம் செய்வதன் அவசியம் மற்றும் பலன்கள் குறித்து விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பென்னலூரில் அமைந்துள்ள அன்னை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ராஜலட்சுமி ஹெல்த் சிட்டி, மருத்துவக் கல்லூரி மாணவர்கள், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மாணவர்கள், நர்சிங் கல்லூரி மாணவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்களை கொண்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை கல்லூரியின் முதல்வர் மருத்துவர் திருமதி கே. வனிதா அவர்கள் தொடங்கி வைத்தார்.
500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட இந்த பேரணியானது, ஸ்ரீபெரும்புதூர் தேர் அடி அருகில் தொடங்கி பஜார் வீதி வழியாக, முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவகம் வரை நடைபெற்று நிறைவடைந்தது