
பெருமாநல்லூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொகுதி மறு சீரமைப்புக் கூட்டம் நடைபெற்றது.
அவினாசி அடுத்துள்ள பெருமாநல்லூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொகுதி மறு சீரமைப்புக் கூட்டமானது நடைபெற்றது.

உள்கட்சி தேர்தல் நடக்கவுள்ளதை அடுத்து தமிழகம் முழுவதும் நிர்வாகிகள் விருப்ப மனு தாக்கல் செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக கோவை , திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அக்கட்சியை சேர்ந்தவர்கள் விருப்ப மனு வழங்கினர்.
கூட்டத்திற்கு தலைமை தேர்தல் பார்வையாளரும் , கட்சியின் தலைமை நிலைய செயலாளருமான இராயநல்லூர் கனல்.உ.கண்ணன் தலைமை தாங்கினார். முன்னதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அரசியல் சாதனை விளக்க துண்டு அறிக்கையை தலைமை நிலைய செயலாளர் கனல்.உ.கண்ணன் வெளியிட்டார். தாராபுரம் சரவணன் , குன்னத்தூர் குழந்தைவேலு , மங்களம் ஜாபர் ஆகியோர் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நிறைவாக மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கா.சாதிக்பாட்ஷா கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.






