
வடுகபட்டி அரசு மேல்நிலை பள்ளியில் பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணாக்கர்களுக்கு பரிசளிப்பு விழா: மக்கள் நல முன்னேற்ற சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மக்கள் நல முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 2024 – 2025ம் கல்வி ஆண்டில் நடைபெற்ற 10ம் வகுப்பு (ம) 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மருத்துவர் செல்வராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் சின்னராஜா ஆகியோர் தலைமையில், வடுகபட்டி நகர செயலாளர் மோகன் மாவட்ட துணைச் செயலாளர் ஆனந்த ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. விழாவில் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் பாளை இரா கணேசன் கலந்துகொண்டு பள்ளி மாணவ மாணவியருக்கு ஊக்கத்தொகை, கேடையம், மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுக்குழு உறுப்பினர் ராம் மோகன், பாலமுருகன் , பரமசிவம், சந்திரசேகர் வடுகபட்டி பேரூராட்சி மன்ற தலைவர் நடேசன் பெ.ஆ.க பொருளாளர் செல்லப்பா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜோதி, உடற்கல்வி ஆசிரியர் கார்த்திகை ராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
மாநில செயலாளர் சந்திர பாண்டியன் மாநில துணைச் செயலாளர் ஜெயமணி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர் .அரசு நலப்பிரிவு மாவட்ட செயலாளர் செல்வம், ஊடகப்பிரிவு மாவட்டச் செயலாளர் ஆனந்தன், மகளிர் அணி மாவட்ட துணைச் செயலாளர் மகேஸ்வரி, கலை இலக்கிய பிரிவு மாவட்டச் செயலாளர் கவிஞர் ராமு, பட்டியல் இன மாவட்ட செயலாளர் ராஜாமணி, பிரிவு மாவட்டச் செயலாளர்,நகர துணைச் செயலாளர் மணிவேல், ஒன்றிய துணைச் செயலாளர் சாத்தாவு, ஊடகப்பிரிவு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், நகர செயற் குழு உறுப்பினர் கண்ணன், வர்த்தக அணி நகர துணை செயலாளர் ராஜேஷ் கண்ணன், சங்க பிரமுகர்கள் சதீஷ்குமார், சுப்பிரமணி மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் மக்கள் நல முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர்,வருகின்ற 2025 – 2026 ம் கல்வி ஆண்டில் பொதுத்தேர்வில் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெறும் மாணாக்கர்களுக்கு தலா 50,001 மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெறும் மாணாக்கர்களுக்கு தலா 50,001/- வழங்கப்பட இருப்பதாக தெரிவித்தார்.






