
புதுச்சேரி உப்பளம் தொகுதி வாணரப்பேட்டை, தாவிதுபேட்டை காமராஜ் அரசு நடுநிலைப் பள்ளியில் ஓவிய கண்காட்சி நடைபெற்றது.
புதுச்சேரி மே-5
புதுச்சேரி உப்பளம் தொகுதி வாணரப்பேட்டை, தாவிதுபேட்டை பகுதிகளில் செயல்பட்டு வரும் காமராஜ் அரசு நடுநிலைப் பள்ளியில் ஓவிய கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது.

பள்ளி வளாகம் மற்றும் முன் மழலையர் வகுப்பில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் வரையப்பட்ட பல்வேறு அழகிய ஓவியங்களை, உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. அனிபால் கென்னடியும், பள்ளிக்கல்வித்துறை துணை இயக்குநர் (பெண் கல்வி) திரு. ராமச்சந்திரன் அவர்களும் திறந்து வைத்து பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில் பெற்றோர்களும் மாணவர்களும் ஆர்வமுடன் பங்கேற்று ஓவியங்களை பார்வையிட்டு மகிழ்ச்சி அடைந்தனர். விழாவின் முக்கிய சிறப்பாக, சிறப்பாக ஓவியம் வரைந்த ஓவியர் திரு. தேவராஜ் அவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. அனிபால் கென்னடியின் சார்பில் பாராட்டு வழங்கப்பட்டது.
தொடர்ந்து, ஓவியங்களின் அழகு மற்றும் சமூகத்தின் மீது இவ்வாறான கலை நிகழ்வுகள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து சட்டமன்ற உறுப்பினர் உரையாற்றினார்.
விழாவிற்கு பொறுப்பாசிரியை திருமதி வி. வசுதா தலைமை வகித்தார். ஆசிரியர் திரு. இரா. ஆனந்தராஜ் வரவேற்புரை வழங்கினார். முடிவில் ஆசிரியை திருமதி ச. மனோரஞ்சிதம் நன்றி கூறினார்.