
பழனியில் மாநில அளவிலான ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் சிலம்ப பயிற்சி பள்ளி இணைந்து நடத்தும் கபடி போட்டி நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி புது தாராபுரம் ரோட்டில் அமைந்துள்ள மைதானத்தில் பழனி ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் சிலம்ப பயிற்சி பள்ளி மூன்றாம் ஆண்டு மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி நடைபெற்றது. இப்போட்டியினை துவங்கி வைக்க வருகை தந்த தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநில பொதுச் செயலாளர் சபரிக்கு விழாவினை ஏற்பாடு செய்திருந்த குழுவினர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்..

பின்பு மாணவிகளுக்கான கபடி போட்டியை தொடங்கி வைத்தார் விழாவில் தலைமை தாங்கி பேசும்போது, கிரிக்கெட் வீரர்கள் மற்ற அணி வீரர்களை எதிரிகளாக பார்க்காமல், வெற்றி தோல்வியை பார்க்காமல் நண்பர்களாக பாவித்து விளையாட வேண்டும். விளையாட்டில் தோல்வி என்பது வெற்றிக்கு அடுத்தபடியாகும் என்று வீரர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து நிறுவனத் தலைவர் மாறன்ஜி அறிவுறுத்தலின்படி நிறைய நலத்திட்டங்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்த ஆலோசித்து வருகின்றனர் மற்றும் இவ்விழாவில் மாநில மாவட்ட நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்