
உப்பளம் தொகுதி புஸ்ஸி சாலையில் திடீர் பள்ளம்! போக்குவரத்து பாதிப்பு!
புதுச்சேரி உப்பளம் தொகுதி புஸ்ஸி வீதி மற்றும் முல்லா வீதி சந்திக்கும் பகுதியில் உள்ள தார்சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது தொடர்பாக அச்சமடைந்த பொதுமக்கள், உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடிக்கு அலைபேசியில் தகவல் தெரிவித்தனர். உடனடியாக அதனை கவனத்தில் எடுத்த சட்டமன்ற உறுப்பினர், மத்திய சாலை மற்றும் கட்டிடம் துறை செயற்பொறியாளர் திரு. ஸ்ரீனிவாசனை சம்பவ இடத்திற்கு வருமாறு கேட்டுக்கொண்டார்.
அவரது அறிவுறுத்தலின்படி, செயற்பொறியாளர் திரு. ஸ்ரீனிவாசன், இளநிலை பொறியாளர் திரு. சிவா பிரகாசத்தை அனுப்பி வைத்து, சட்டமன்ற உறுப்பினர் அவருடன் இணைந்து சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் அவசர நடவடிக்கையாக கான்கிரீட் கலவை கொண்டு பள்ளம் சரிசெய்யப்பட்டு, பாதை மீண்டும் இயல்புநிலைக்கு கொண்டுவரப்பட்டது. பொதுமக்கள் இந்த உடனடி நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
உடன் பொதுப்பணி துறை பாதாள வடிகால் அமைப்பு இளநிலை பொறியாளர் சங்கர், கழக தொகுதி செயலாளர் சக்திவேல், துணை செயலாளர் ராஜி மற்றும் நிசார், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளை செயலாளர்கள் ஆறுமுகம், ராகேஷ், கழக சகோதரர்கள் மோரிஸ், ரகுமான், பரணி ஆகியோர் உடன் இருந்தனர்.






