
கமுதியில் இருந்து கோரைப்பள்ளம் கிராமத்திற்கு புதிய அரசு பேருந்து திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் துவக்கி வைத்தார்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கோரை பள்ளம் கிராமத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. விவசாயத்தை மட்டும் நம்பி உள்ள இப்பகுதி மக்கள் போக்குவரத்து வசதி இல்லாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று போக்குவரத்து துறை அமைச்சர் உத்தரவின் பேரில், திமுக மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ ஏற்பாட்டில் நேற்று கமுதியில் இருந்து கோரைப்பள்ளம் கிராமத்திற்கு புதிய அரசு பேருந்து துவக்கி வைக்கப்பட்டது.திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் காதர் முகைதீன், அரசு போக்குவரத்து கழக கமுதி மேலாளர் ராஜ்குமார், திமுக நகர செயலாளர் பாலமுருகன், தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளரும்,முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணை சேர்மனுமான அய்யனார, ஒன்றிய கவுன்சிலர்கள் முத்துக்கிளி, உதயகுமார், மாவட்ட பிரதிநிதிகள்
பாரதிதாசன், ஜேசுராஜ், மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.