July 28, 2025
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுக்கா பகுதியில் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் கலெக்டர் மோகனச்சந்திரன் முகாமிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுக்கா பகுதியில் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் கலெக்டர் மோகனச்சந்திரன் முகாமிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.

கூத்தாநல்லூர் தாலுக்காவில் உள்ள 55 வருவாய் கிராமங்களில் நடைபெற்ற உங்களை தேடி, உங்கள் ஊரில் முகாமில் 125 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது.

மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண கலெக்டர் கூத்தாநல்லூர் தாலுகாவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டதுடன், அனைத்து அரசு துறை உயர் அலுவலர்களும் வருவாய் வட்டத்தில் கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி தகுதியான மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்யும் பொருட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கூத்தாநல்லூர் பகுதியல் புதிய தாலூக்கா அலுவலகம் கட்டுவதற்கான இடத்தினையும்
கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளி, வெளிநோயாளி விவரப்பதிவேடுகளை பார்வையிட்டு உள்நோயாளிகள் அனுமதிக்கப்பட்ட காரணம் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, 15வது மானிய நிதி குழு திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனையில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் இரண்டு அடுக்குகளை கொண்ட கட்டிடம் கட்டும் பணியினையும், வண்டிப்பேட்டை பகுதியில் கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டும் பணியினையும், ரம்ஜான் மார்க்கெட் அருகில் கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டும் பணியினையும் ஆய்வு செய்தார்.

   பண்டுதக்குடி பகுதியில், காடுவெட்டி தெருவில் வசித்து வரும் 9 நபர்களுக்கு புஞ்சை தரிசு இடத்தில் வீட்டு மனை பட்டா வழங்கவுள்ள இடத்தினையும், வடபாதிமங்கலம் ரோடு மெஜஸ்டிக் எதிர்புறம் அமைந்துள்ள  நீர் தடுப்பு குறுகிய நிலையில் உள்ளதையும்  கலெக்டர் மோகனச்சந்திரன், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது கூத்தாநல்லூர் நகர்மன்றத்தலைவர் பாத்திமா பஃஷிரா, கூத்தாநல்லூர் வட்டாட்சியர் தேவகி,  தனித் துணை வட்டாட்சியர் மணிவண்ணன், நகராட்சி ஆணையர் கீர்த்திக்கா ஜோதி, நகராட்சி மேற்பார்வை பொறியாளர் பிரதான்பாபு, கொரடாச்சேரி ஒன்றிய ஆணையர்கள் பிரபு, விஜயலட்சுமி உள்ளிட்ட  அனைத்து துறை அரசு உயர் அலுவலர்களும் கூத்தாநல்லூர் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் முகாமிட்டு மக்களிடம் நேரில் சென்று குறைகளை கேட்டறிந்தனர். 

படம் விளக்கம். உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா பகுதியில் திருவாரூர் கலெக்டர் மோகனச்சந்திரன் சாலை பணியினை ஆய்வு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.