
இயற்கை விவசாயம் - அதிக மகசூல் சாதனை படைத்த விவசாயிகளுக்கு நபார்டு வங்கி பொதுமேலாளர் விருதுகள் வழங்கினார்.
காரியாபட்டி, ஏப்:23 .
இயற்கை விவசாயம், அதிக மகசூல் சாதனை படைத்த விவசாயி களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. விருதுநகர மாவட்டம், மல்லாங் கிணறில் இயங்கி வரும் சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் 30 வது ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு, நிறுவனச் செயலாளர் பாண்டியன் தலைமை வகித்தார். தலைவர் செல்லம்மாள் முன்னிலை வகித்தார். விழாவில், நிறுவன த்தின 30-வது ஆண்டு ஆண்டு சிறப்பு மலர் வெளியிடப் பட்டது. விழாவில், இயற்கை விவசாயம், அதிகமான மகசூல் , மற்றும் சிறுதானிய உற்பத்தி யில் சிறந்த விவசாயிகள் 30 பேருக்கு , நபார்டு வங்கி உதவி பொது மேலாளர்கள்
ராஜசுரேஷ் வரன் , அனுஷா எலிசபெத் ஆகியோர் விருதுகள் வழங்கினார்கள். விழாவில்,
பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி கள் நடை பெற்றது.
சமு நதி மேலாளர் சுரேஷ பாபு, பிரதான் அமைப்பு ஆதிநாராயணன, வலையங்குளம் சந்திரன், அமிர்தவள்ளி உட்பட பலர் பங்கேற்றனர். திட்ட மேலாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.