
மேலக்கால் ஊராட்சி சார்பில் வைகை ஆற்றில் துப்புரவு பணி செய்து மரக்கன்றுகள் நடப்பட்டது
சோழவந்தான் ஏப்ரல் 23
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் வைகை ஆற்று பாதையில் மயான முதல் வைகை ஆற்றுப்பகுதி வரை கரையோரம்இருந்த குப்பைகள் jcp எந்திரம்மூலம் அகற்றப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் வீடுகள் பழனிவேல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணவேணி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பூர்ணிமா ஊராட்சி செயலாளர் விக்னேஷ் ஆகியோர் மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள் துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் பணிகளை மேற்கொண்டனர்.