
வாடிப்பட்டி பேரூரில் தே.மு.தி.க உறுப்பினர்சேர்க்கை முகாம் நடைபெற்றது.
வாடிப்பட்டி, ஏப்:23.
மதுரை வடக்கு மாவட்டம், வாடிப்பட்டி பேரூர் தே.மு.தி.க சார்பாக 18 வார்டுகளில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
இந்த முகாமிற்கு, பேரூர் செயலாளர் பாலாஜி தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர்கள் முத்துக்குமார், தங்கராஜ், பொன் யாழினி முன்னிலை வகித்தனர். இந்த முகாமினை, மாவட்டச் செயலாளர் பாலச்சந்தர் துவக்கி வைத்தார்.
இந்த முகாமில், ஒன்றிய செயலாளர் நாகராஜ்,மாவட்ட அவைத் தலைவர் கர்ணன்,
பேரூர் அவைத் தலைவர் காளவாசல் கோபால், பொருளாளர் சோமநாதன், சங்கு பிள்ளை, பி பி முருகன் ,சரவணன் ராஜேஷ் ஹரி முன்னாள் பேரூர் செயலாளர்கள் மாரியப்பன், ஜெயராஜ், மாவட்ட நிர்வாகிகள் முத்துப்பாண்டி, கிருஷ்ணன்,சூரிய பிரகாஷ். மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் நிர்மலா தேவி, ஆனையூர் பழனி, மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணிச்செயலாளர் அருண் சந்தர், மகளிர் அணி ஒன்றிய நிர்வாகி நிர்மலா தேவி
உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில், தாதம்பட்டி, நீரேத் தான்,போடிநாயக்கன்பட்டி, குலசேகரன்பட்டி உள்ளிட்ட
பகுதிகளில் 1234 புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, அடையாள அட்டை வழங்கப்பட்டது.