
கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 22 ஆவது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
முகமது சதக் அறக்கட்டளையின் இயக்குனர் ஹபிப் முகமது சதக்கத்துள்ள தலைமை ஏற்று நடத்தினார். அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் G. ரவி
அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா உரையாற்றி ,பட்டங்களை வழங்கினார் இவ்விழாவில்கல்வி என்பது கரைகளும் எல்லைகளும் அற்றது மாணவர்கள் மாணவர்கள் நூலகத்திற்கு சென்று தங்கள் ஆர்வத்துக்கு ஏற்ற துறையினை தேர்வு செய்து நூல்களை கற்பதின் மூலம் தங்கள் அறிவை வளர்த்துக் கொண்டு பட்டதாரிகளாகிய நீங்கள் சமுதாயத்திற்கு பயனுள்ள விருதத்தின் வாழ வேண்டும் என்று பட்டாகரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
கல்லூரி முதல்வர் முனைவர் ராஜசேகர் முன்னிலை வகித்து கல்லூரியின் ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார்.
மேலும் இவ்விழாவில் இளங்கலை இயற்பியல், வேதியியல், கணிதவியல், நுண்ணுயிரியல், ஆங்கிலம், தொழில் மேலாண்மை, தகவல் தொழில்நுட்பவியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், வணிகவியல் பொது மற்றும் கணினி பயன்பாடு மற்றும் முதுகலை ஆங்கிலம், கணினி அறிவியல், கணிதவியல், வணிகவியல் ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்ற 285 மாணவ மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் முனைவர் பார்த்திபமணி, முகமது நஜ்முதீன், சுலைமான், சுரேஷ், ராமநாதன், நூலகர் பால்ராஜ், உடற்கல்வி இயக்குனர் தவசிலிங்கம், கல்லூரி நிர்வாக அலுவலர் சரவணன் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
முகமது சதக் அறக்கட்டளையின் தலைவர் யூசுப் செயலாளர் ஷர்மிளா இயக்குனர்கள் ஹாமிது இப்ராஹிம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.