
உசிலம்பட்டியில் விசிக சார்பில் வெற்றி விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.
உசிலம்பட்டி:
மதுரை, உசிலம்பட்டியில் விசிக சார்பில் கட்சி அங்கீகார வெற்றி விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் இரண்டு தொகுதிகளில் தனி சின்னமான பானை சின்னத்தில் வெற்றி பெற்று மாநில அங்கீகாரம் பெற்றதையடுத்து தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் அக்கட்சியினர் கட்சி அங்கீகார வெற்றி விழா பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்ற சூழலில் இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பொன்னுச்சாமி தியேட்டர் எதிரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கட்சி அங்கீகார வெற்றி விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில், மாவட்டச் செயலாளர் ஊர்சேரி சிந்தனைவளவன் தலைமையில் நடைபெற்றது. இதில், செய்யூர் எம்.எல்.ஏ. பனையூர் பாபு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில், விசிக கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், உசிலம்பட்டி நகரம், உசிலம்பட்டி ஒன்றியம், சேடப்பட்டி ஒன்றியம், செல்லம்பட்டி ஒன்றியம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.