
நிலக்கோட்டை அருகே வாழைப்பழங்களை வைத்து வினோத வழிபாடு விழா
நிலக்கோட்டை,ஏப்.7- திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள கூ.குரும்பபட்டியில் ஊர் காவல் தெய்வம் சட்டைக்காரன் கோவில் வாழைப் பழங்களை குவியல் குவியலாக வைத்து வருடம் தோறும் பங்குனி மாதத்தில் வினோத வாழைப்பழம் வைத்து வழிபடும் விழா ஊர் குடும்பனார் அய்யனார் தலைமையில் திருவிழா நடைபெற்றது.
அதன்படி கிராம மக்கள் வாழைப்பழங்களை கூடையில் வைத்து கிராமத்திலிருந்து மேளம் முழங்க வானவேடிக்கையுடன் ஊர்வலமாக வந்தனர். இதில் கிராமத்தின் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு 50 ஆயிரம் வாழை பழங்களுக்கு மேல் தங்கள் நேற்றி கடனாக வாங்கி சட்டைக்காரன் சாமிக்கு படைத்தனர்.
விழாவில் கிராமப் பொதுமக்கள் 1500 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி கிராமத்தில் உள்ள மக்களின் நலனுக்காகவும், ஒற்றுமைக்காகவும் கூட்டு பிராத்தனை செய்தனர். அதனைத் தொடர்ந்து வாழைப்பழம் சுவாமி யின் அருள் பெற்ற வாழைப்பழத்தை ஒருவருக்கொருவர் போட்டி போட்டு வாங்கிக்கொண்டு வீட்டுக்கு கொண்டு சென்றனர்.
இப்படி வினோதமாக வாழைப்பழம் மட்டும் வைத்து திருவிழா கொண்டாடுவதில் கிராம மக்களும் சுற்றுவட்டார பொது மக்களும் உள்பட பலர் கலந்து கொண்டனர்.