April 16, 2025
முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் 45வது ஆண்டு விழா நடைபெற்றது.

முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் 45வது ஆண்டு விழா நடைபெற்றது.

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் 5-4-2025 அன்று கல்லூரியின் 45 வது ஆண்டு விழா, விளையாட்டு பரிசளிப்பு விழா மற்றும் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

முகம்மது சதக் அறக்கட்டளையின் தலைவர் அல்ஹாஜ் முகமது யூசுப், செயலாளர் ஹாஜியாணி ஷர்மிளா, செயல் இயக்குனர் ஜனாப் ஹமீது இப்ராஹிம், இயக்குனர் ஜனாப் ஹபீப் முஹம்மது ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் திரு சேக்தாவூது அவர்கள் தலைமை தாங்கி பேசுகையில் கடந்த வருடம் அனைத்து துறைகளிலும் பாலிடெக்னிக் கல்லூரியின் செயல்பாடு, வளர்ச்சி மற்றும் வெற்றிகள் பற்றி எடுத்துரைத்து ஆண்டு அறிக்கையினை சமர்ப்பித்தார்கள்

முன்னதாக கல்லூரியின் துணை முதல்வரும், இயந்திரவியல் துறை தலைவருமான முனைவர் கணேஷ்குமார் அவர்கள் விழாவிற்கு வந்திருக்கும் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்கள். இதனை தொடர்ந்து விளையாட்டு விழா அறிக்கையினை உடற்கல்வி இயக்குநர் திரு மருதாசலமூர்த்தி அவர்கள் சமர்ப்பித்தார்கள்.

இவ்விழாவிற்கு சென்னை லூகாஸ் டிவிஎஸ் லிமிடெட் ன் பொது மேலாளர் மற்றும் மனிதவள துறைத்தலைவர் திரு உதயகுமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில் தொழில்நுட்ப மாணவர்கள் அரசு மற்றும் தனியார் துறை மூலம் வரும் வாய்ப்புகளை பயன்படுத்தி தங்களது திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அதன் மூலம் வேலை வாய்ப்பினை பெற்று வெற்றி பெற வேண்டும் என்றும் பேசினார்கள்.இவ்விழாவில் சென்னை லூகாஸ் டிவிஎஸ் லிமிடெட் ன் சிஎஸ்ஆர் ஆலோசகர் திரு கண்ணன் அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்துகொண்டு பேசுகையில் தொழில்நுட்ப அறிவின் முக்கியத்துவத்தையும் வேலைவாய்ப்புக்குத் தேவையான மென் திறன்களின் அவசியத்தையும் பற்றி பேசினார்கள்

இவ்விழாவில் கடந்த ஏப்ரல் 2024 மற்றும் அக்டோபர் 2024 வாரியத் தேர்வுகளில் ஒவ்வொரு பருவத்திலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கிய மாணவர்களுக்கும் சான்றிதலும் பரிசுகளும் வழங்கப்பட்டன

மேலும் விளையாட்டு மற்றும் தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்க்கு சான்றிதழும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. முத்தாய்ப்பாக சென்னை லூகாஸ் டிவிஎஸ் லிமிடெட் சார்பாக இந்த ஆண்டு முதல் கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்கள் மூவர்க்கு சிறந்த மாணவர்களுக்கான ரூ 10,000 பண விருதுகளும், இரண்டாம் ஆண்டு மாணவர்களில் தகுதியான மூன்று நபர்களுக்கு ஒரு வருடத்திற்கான கல்விக் கட்டணமும் மற்றும் கல்லூரியில் 15 மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணமும் வழங்கப்படுகிறது என்றும், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சமீபத்தில் சென்னையில் மேற்கொள்ளப்பட்டது என்றும் கல்லூரி முதல்வர் அவர்கள் தெரிவித்தார்கள்.

இவ்விழாவில் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கு அவர்தம் பெற்றோர் முன்னிலையில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் திரு.கணேஷ்குமார் அவர்கள் செய்திருந்தார்கள்

நிறைவாக மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.

நிறைவாக மின்னியல் துறை தலைவர் திரு பாலசுப்ரமணியன் அவர்கள் நன்றி கூறினார்கள்.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஆலோசனையில் துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவியர் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.