April 19, 2025
சோழவந்தான் குருவித்துறை கோவில்களில் வெங்கடேசன் எம் எல் ஏ சாமி தரிசனம் அன்னதானத்தையும் தொடங்கி வைத்தார்

சோழவந்தான் குருவித்துறை கோவில்களில் வெங்கடேசன் எம் எல் ஏ சாமி தரிசனம் அன்னதானத்தையும் தொடங்கி வைத்தார்

சோழவந்தான், ஏப்ரல்: 7 .

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவின் மூன்று மாத கொடியேற்றம் கடந்த 31ஆம் தேதி நடைபெற்றது.

அதற்கு முதல் நாள் ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடைபெற்று தற்போது பிரமோற்சவ விழாவில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. குருவித்துறை சித்திரை ரத வல்லப பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

தொடர்ச்சியாக, சோழவந்தான் மற்றும் குருவித்துறை ஆகிய பகுதிகளில் உள்ள திருக்கோவில்களில் திருவிழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் சோழவந்தான்
சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், இந்த கோவில்களில் சாமி தரிசனம் செய்து, அன்னதானத்தை தொடங்கி வைத்தார். சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலுக்கு வருகை தந்த வெங்கடேசன் எம். எல். ஏ. வை,கோயில் கணக்கர் சி. பூபதி வரவேற்றார்.
அர்ச்சகர் சண்முகம் பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார். ஜெனக நாராயண பெருமாள் கோவிலில், அர்ச்சகர் பார்த்தசாரதி பூஜைகள் செய்து, .எம் எல். ஏ. விற்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்தார்.

தொடர்ந்து, குருவித்துறை சித்திரை ரத வல்லப பெருமாள் கோவிலில் உள்ள பெருமாள் சந்ததி குரு பகவான் சன்னதி ஆகியவற்றில் சாமி தரிசனம் செய்தார். பின்னர்,
கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் நடைபெற்ற அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில், வாடிப்பட்டி தெற்கு ஒன்றியச் செயலாளர் பசும்பொன்மாறன், சோழவந்தான் பேரூராட்சித் தலைவர் எஸ். எஸ். கே. ஜெயராமன், பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், வாடிப்பட்டி வடக்கு ஒன்றியச் செயலாளர் பால ராஜேந்திரன்,
வாடிப்பட்டி பேரூராட்சித் தலைவர் பால்பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், துணைத் தலைவர் லதா கண்ணன், பிற்பட்டோர் நலவாரிய உறுப்பினர் பேட்டை பெரியசாமி, வாடிப்பட்டி பேரூர் முன்னாள் செயலாளர் மு.பா பிரகாஷ், துணைத் தலைவர் வக்கீல் கார்த்திக் முன்னாள் பேரூராட்சி தலைவர் ஐயப்பன், பொருளாளர் எஸ். எம். பாண்டியன், அறங்காவலர் ராஜாங்கம், கேபிள் ராஜா வார்டு கவுன்சிலர்கள் கொத்தாலம் செந்தில் வேல் சிவா கௌதம ராஜா முத்து செல்வி சதீஷ் தொமுச செயலாளர் பாலசுப்பிரமணியன் மாணவரணி எஸ் ஆர் சரவணன் தவம் வார்டு பிரதிநிதி ராமநாதன் செங்குட்டுவன் நாகேந்திரன் சசிகலா சக்கரவர்த்தி சங்கங்கோட்டை சந்திரன் ரவி கண்ணதாசன் முத்துவேல் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.