
தமிழகம் முழுவதும் கட்டப்பஞ்சாயத்து செய்யும் போலீஸ் நிலைய அதிகாரிகள்!
முதலமைச்சர் மாநில இளைஞர் விருதிற்கான விண்ணப்பங்கள் தென்காசி மாவட்டம் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ஏ.கே. கமல் கிஷோர் அவர்கள் தெரிவித்த தகவலின்படி சமுதாய வளர்ச்சிக்காக சேவையாற்றும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஆண்டுதோறும் 15 ஆகஸ்ட் சுதந்திர தினத்தன்று வழங்கப்படுகிறது. இவ்விருது ரூ.1,00,000, பாராட்டு விழா பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவற்றுடன் வழங்கப்படும்.
2025 ஆம் ஆண்டிற்கான விருதிற்கான தகுதிகள்.
வயது: 01.04.2024
15 வயது நிரம்பியவராகவும், 31.03.2025 35 வயதுக்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
குறைந்தது 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்திருக்க வேண்டும் (சான்றுடன்).
சமுதாய நலனுக்காக தன்னார்வ தொண்டுப்பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
அரசு/பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் கல்வி நிறுவன ஊழியர்கள் விண்ணப்பிக்க இயலாது.
கடந்த நிதியாண்டான 2024-2025 (01.04.2024 – 31.03.2025) காலப்பகுதியில் செய்த சேவைகள் மட்டும் பரிசீலிக்கப்படும்.
விண்ணப்பம் செய்வது எப்படி.
03.04.2025 முதல் 03.05.2025, மாலை 4.00 மணி வரை, www.sdat.tn.gov.in இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பித்த பின், ஆதார சான்றுகள் மற்றும் புகைப்படங்களுடன், 3 நகல்களில் புத்தக வடிவில் தயார் செய்து கீழ்கண்ட முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்:
மாவட்ட விளையாட்டு அலுவலகம்,
163.அ. ரயில்வே ரோடு,
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக பின்புறம்,
தென்காசி.
விண்ணப்பம் சமர்ப்பித்திட கடைசி நாள் : 03.05.2025, மாலை 4.00 மணி.
மேலும் விபரங்களுக்கு. 04633 – 212580 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
மாணவர், இளைஞர். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது..