April 19, 2025
பத்திரிகையாளர் தமிழன் வடிவேல் அவர்களுக்கு "வீரமிகு எழுச்சி நாயக, எழுத்து அரசர் விருது" வழங்கி கௌரவிப்பு....!

பத்திரிகையாளர் தமிழன் வடிவேல் அவர்களுக்கு "வீரமிகு எழுச்சி நாயக, எழுத்து அரசர் விருது" வழங்கி கௌரவிப்பு....!

அகில இந்திய பெண்கள் மற்றும் சமூக நல பவுண்டேஷன் சார்பில் வீரமிகு எழுச்சி நாயக, எழுத்து அரசர் விருது வழங்கி கௌரவித்த நிறுவனர்/ பொதுச்செயலாளர் சித்ரா குமரேசன் அவர்களுக்கு நன்றி…!நன்றி…!

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலக வளாகத்தில் அகில இந்திய பெண்கள் மற்றும் சமூக நல பவுண்டேஷன் சார்பில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது, துப்புரவு பணியாளர்களுக்கு புடவைகள், பெண் ஆட்டோ ஓட்டுநர்களை கௌரவித்தது, சிறந்த சமூக சேவைகளை செய்து வரும் அறக்கட்டளைகளின் தலைவர்களுக்கு கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி சிறந்த பத்திரிகையாளர், சிறந்த வழக்கறிஞர்கள் என பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களை கௌரவித்தும் அவர்களுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.

இதில் ஊடகத்துறையில் “வீரமிகு எழுச்சி நாயக,எழுத்து அரசர்” விழுது வழங்கி என்னை கௌரவித்த அதன் நிறுவனத் தலைவர் சித்ரா குமரேசன் அவர்களுக்கு எங்களது தென்னிலை கதிர் மற்றும் ஊடக உரிமைக்குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த சிறப்பான நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொருளாளர் ஹாஜி,திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம், ஊடக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவத் தலைவரும், பத்திரிகையாளருமான வி. எம். தமிழன் வடிவேல், கட்டபொம்மன் அவர்களின் வம்சமும் மக்கள் முன்னேற்ற இயக்கத்தின் நிறுவனத் தலைவருமான டாக்டர் இளைய கட்டபொம்மன், அரசு டீவி நிறுவனர் மற்றும் வெளிச்சம் பத்திரிகையின் ஆசிரியர் பெஞ்சமின், குன்றத்தூர் சேரமன் சரஸ்வதி மனோகரன்,மண் மனம் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் முத்து, மா.தாமோதரன் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணை தலைவர் மற்றும் அகில இந்திய பெண்கள் மற்றும் சமூக நல பவுண்டேஷன் மாநில,மாவட்ட நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த சிறப்பான நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

அகில இந்திய பெண்கள் மற்றும் சமூக நல பவுண்டேஷன் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் வீ.சித்ரா குமரேசன் அவர்கள் அனைவரையும் வரவேற்று சிறப்பான முறையில் நிகழ்ச்சியினை வழிநடத்தி சென்றார்.

இந்த நிகழ்சிக்கு உடனிருந்த அனைத்து உதவிகளையும் செய்து வந்த அனைத்து நிர்வாகிகளுக்கும், கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் அதன் நிறுவனர் சித்ரா குமரேசன் அவர்கள் நன்றிகளை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.