
திண்டுக்கல்லில் மத நல்லிணக்க இஃப்தார் விருந்து
திண்டுக்கல் பேகம்பூர் அருகே உள்ள தனியார் திருமண மஹாலில் தேசிய காங்கிரஸ் கமிட்டி நண்பர்கள் சார்பாக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி இஃப்தார் விருந்து பொதுக்குழு உறுப்பினர் ஜாகிர் 1 உசேன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பங்குத்தந்தை பிலிப் சுதாகர், ராஜரிஷி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நோன்பு திறந்தார்கள்.
முகமது ஆஷிக் மௌலானா மௌலவியா இமாம் இப்தார் நோன்பின் சிறப்பு தொழுகை நடத்தினார்.

கஞ்சி, பேரிச்சம்பழம், தர்பூசணி, ஆப்பிள், திராட்சை உள்ளிட்ட பழ வகைகள், வடை, ரோஸ் மில்க் ஆகியவை உணவு பொருட்கள் நோன்பு திறப்பின் போது வழங்கினார்கள்.
காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் சதீஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் மச்சக்காளை, பொட்டு செல்வம், குப்புசாமி, ஜோசப் மார்ட்டின் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ஜாதி மத பேதமின்றி அனைவரும் ஒன்று கூடி நோன்பு திறந்தனர்.