
மே 11 மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள மாபெரும் வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டிற்கான மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மே 11 மாமல்லபுரத்தில் நடைபெறும் மாபெரும் வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டிற்கான கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் தேதி.24/03/2025
திங்கள் கிழமை இடம்.பேபி திருமண மண்டபம் எலவனாசூர்கோட்டையில்
நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஏகே சுவாமி எ குமாரசாமி கவுண்டர் நேருமதுரமுத்து முன்னாள் மா செயலாளர் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பார்கள் தர்மபுரி PV.செந்தில் அவர்கள்
மாநில இளைஞர் சங்க செயலாளர் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்ட மாநாட்டு பொறுப்பாளர்.. பனையபுரம் C அன்புமணி அவர்கள் மாநில வன்னியர் சங்க துணை தலைவர்
உளுந்தூர்பேட்டை ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி மாநாட்டு பொறுப்பாளர்.. ராஜ்குமார் மாவட்ட தலைவர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
1 ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் 15 வாகனங்கள் என்று
உளுந்தூர்பேட்டை ரிஷிவந்தியம் இரண்டு சட்டமன்றத் தொகுதியில் 250 வாகனங்கள் சித்திரை முழுநிலவு மாநாட்டில் கலந்து கொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
2 இந்த மாநாடு 2026 தேர்தலை நிர்ணயிக்கப் போகும்போது மாநாடாக இருக்க வேண்டும் அதற்காக ஒவ்வொரு ஒன்றிய செயலாளர் கிளை அளவில் அனைத்து சமூக மக்களையும் சென்று சந்தித்து துண்டு பிரசுரங்களை அவர்களுக்கு அளித்து அவர்களையும் மாநாட்டுக்கு அழைத்து வர வேண்டுமென்று தீர்மானம் தெரிவிக்கப்பட்டது.
3 பொதுமக்களுக்கும் வேறு எந்த சமூக மக்களுக்கும் எந்த விதமான இடையூறுகளும் இல்லாமல் வன்னிய இளைஞர்கள் சமூக அக்கறையோடு பொதுநலனோடு மாநாடு சென்று வரும் வரை கண்ணியமாக சென்று வர வேண்டும் இந்த உலகமே இந்த மாநாட்டில் கவனிக்கும் விதத்தில் நடைபெறுவதற்கு மருத்துவர் ஐயா அவர்களுக்கும் மருத்துவர அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும் அவர்களின் சொல்படி கேட்டு அனைவரும் பாடுபட வேண்டும் என்று என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
4 தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்தப்பட வேண்டும் மற்ற விஷயங்கள் எல்லாம் பல மாநிலங்களில் சுட்டிக்காட்டும் தமிழக அரசு பல மாநிலங்களை சாதிவாரி கணக்கெடுக்கும் போது அதை ஏன் பின்பற்ற மறுக்கிறது உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சாதியினருக்கும் அவர்களின் விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீட்டை வழங்கி சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும் ஜாதி கணக்கெடுப்பு என்பது பிரிவினையை உருவாக்குவதற்கல்ல, சமத்துவத்தை உறுதி செய்யவே! தமிழ்நாட்டில் ஜாதி கணக்கெடுப்பு நடைபெறுவது மாநில மக்களுக்கு பலவிதமான பயன்களை அளிக்கக்கூடியது. குறிப்பாக, மூலதனமற்ற சமூகங்களுக்கான உரிய ஆதரவுகளை வழங்கவும், சமத்துவத்தைக் கட்டியெழுப்பவும், அரசாங்க கொள்கைகளை மேம்படுத்தவும் இது உதவுகிறது.
ஜாதி கணக்கெடுப்பு என்பது பிரிவினையை உருவாக்குவதற்கல்ல, சமத்துவத்தை உறுதி செய்யவே! தமிழ்நாட்டின் மக்கள் தொகை விவரங்களைத் துல்லியமாக கணக்கெடுத்து, அரசியல், பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பில் உரிய சீர்திருத்தங்களை கொண்டு வர இது மிகவும் தேவையான ஒன்று. நியாயமான வளர்ச்சி மற்றும் சமத்துவத்தை நோக்கி
இந்த கூட்டம் கேட்டுக் கொள்கிறது…
5 ஆளும் அரசு எதிர்க்கட்சியாக இருந்த போது தமிழக முழுவதும் போராட்டம் நடத்திய இதே அரசு தற்போது ஆளும் அரசாக உள்ளபோது மது கடைகளை அகற்றி தமிழக மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு ஏராளமான விதவைகள் உருவாகாமல் இருப்பதற்கு இந்த தமிழக அரசு ஏன் மறுக்கிறது உடனடியாக மது கடைகளை மூட வேண்டும் என்று இந்த கூட்டத்தில் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன் கூட்டத்தில் 300 க்கும் மேற்பட்ட மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கிளை வன்னியர் சங்கத் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து உள்ள முன்னோடி நிர்வாகிகள்.. வன்னியர் சங்க நிர்வாகிகள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி அனைத்து அணிகள் சார்ந்த நிர்வாகிகளும் முன்னாள் அனைத்து நிலை பொறுப்பாளர்களும்
கலந்து கொண்டனர்.