March 2, 2026
பழனியில் சமூக நல்லிணக்க இப்தார் மற்றும் ரமலான் அன்பளிப்பாக காயிதே மில்லத் அறக்கட்டளை சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கபட்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடியில் ஆயை காயிதே மில்லத் சிறுபான்மை சமூக சேவை அறக்கட்டளை சார்பில் ஆயக்குடி பேரூராட்சியில் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு சமூக நல்லிணக்க இப்தார் மற்றும் ரமலான் அன்பளிப்பாக வேஷ்டி , மற்றும் சேலைகள் பணியாளர்களுக்கு பேரூராட்சி அலுவலகத்தில் வழிபாடு நடத்தப்பட்டு புதிய உடைகள் மற்றும் இனிப்புகளை அறக்கட்டளை நிறுவன தலைவர் அஜ்மத் அலி வழங்கினார்.

முன்னதாக இப்தார் நோன்பு வழங்கப்பட்டு அப்பகுதி 300க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு உடைகள் மற்றும் உணவுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆயிலை காயுதே மில்லத் சமூக அறக்கட்டளை சார்பில் 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி சேலை வழங்கப்பட்ட நிகழ்வு நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *