
நிலக்கோட்டை ஏழாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி வீட்டில் பாத்ரூமில் தூக்கு போட்டு தற்கொலை
நிலக்கோட்டை, மார்ச் 7- திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, இபி காலனி நாகம்மாள் கோவில் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் வயது 40. இவரது மகள் இனியா வயது 13. இவர் நிலக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணிக்கு பாத்ரூம் சென்றவர் ஒரு மணி நேரமாகியும் வெளியே வரவில்லை. இதைப் பார்த்த லோகநாதன் பாத்ரூம் சென்றது இல்லை இன்னும் வரவில்லையே என்று கதவை தட்டி அழைத்துள்ளார்.
பதில் வரவில்லை. உடனடியாக கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது துப்பட்டாவால் பாத்ரூமில் கொக்கியில் தூக்கு போட்டு இனியா தொங்கிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த லோகநாதன் ஐயோ என்று சத்தம் போடா அக்கம் பக்கத்தினர் உடனடியாக வந்து நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனிடம் லோகநாதன் கொடுத்த புகாரின் படி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
திடீரென்று பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்வதற்கு பள்ளியில் ஆசிரியர்கள் திட்டினார்களா? இல்லை பெற்றோர்கள் குழந்தையை திட்டினார்களா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏழாம் வகுப்பு பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.