
சங்கரன்கோவிலில் வழக்கறிஞரை தாக்கிய பெண். போலீசார் விசாரணை.
தென்காசி,மார்ச்.08: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பன்னீருத்து கிராமத்தை சேர்ந்தவர் பச்சைமால் இவரது மனைவி புவனேஸ்வரி இருவருக்கும் இடையே கடந்த சில வருடங்களாக விவாகரத்து சம்பந்தமாக சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது தெரியவருகிறது.
இந்த நிலையில் நேற்றைய முன்தினம் ஜீவனாம்சம் சம்பந்தமாக விசாரணை நடைபெற்றது.அப்போது புவனேஸ்வரி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து நேற்று முன்தினம் விசாரணை நடைபெற்ற நிலையில் தனக்கு எதிராக வாதாடிய வழக்கறிஞர் திருமலைச்சாமி நீதிமன்றம் அருகே உள்ள கடையில் தேநீர் அருந்தி கொண்டிருந்த போது புவனேஸ்வரி அங்கு சென்று வழக்கறிஞர் திருமலைச்சாமியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு அருகில் இருந்த வாளியால் கடுமையாக தாக்கியுள்ளார்.இதில் வழக்கறிஞர் திருமலைச்சாமி தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.இதனையடுத்து வழக்கறிஞர் திருமலைச்சாமி சங்கரன்கோவில் நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
நடந்த இந்த சம்பவத்தால் சங்கரன்கோவில் நீதிமன்ற வளாகத்தில் பரப்பரப்பும் பதட்டமும் நிலவியது.மேலும் வழக்கறிஞரை தாக்கிய புவனேஸ்வரியை பிடித்து சங்கரன்கோவில் நகர் காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.