
தமிழக ஜனதா தளம் (TJD) சார்பாக மகளிர் தின வாழ்த்துகள்.
உலகம் முழுவதும் மார்ச் 8 மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. சாதனைகளோடு சரித்திரம் படைக்க கடவுளால் படைக்கப்பட்ட கற்பவிருட்சம்தான் பெண்கள் இந்த உலகில் பெண்கள் இன்றி அணுவும் அசையாது. உடலுறுதி கொண்ட ஆணைவிட மனவுறுதி கொண்ட பெண்கள் சிறப்புமிக்கவர். தாயாக, மனைவியாக, தங்கையாக, மகளாக, தோழியாக என்று நம் உறவின் அனைத்து பகுதியிலும் மறைதிருப்பவர்கள் பெண்கள், ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று கூறப்படுவது இதனால்தான். தோல்விகளை கண்டு துவண்டு விடாது, அதனை எதிர்கொண்டு வாழ்வில் வெற்றிக் கண்ட பல பெண்கள் நம் மத்தியில் வாழ்கின்றனர். அவ்வாறான பெண்களுக்கு மட்டுமின்றி அனைத்துலக பெண்களுக்கும், இன்றைய மகளிர் தின நாளில் பெண்ணடிமை ஒழியட்டும், பெண்ணின் முன்னுரிமையை இந்த உலகம் உணரட்டும் என்று கூறி மகளிர் தின வாழ்த்துகளை தெரிவிப்பதில் தமிழக ஜனதா தளம் (TJD) மகிழ்ச்சியடைகின்றது.