
கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் துளிர் வாசகர் திருவிழா நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மூலம் வெளிவரும் துளிர் இதழ் வாசகர் திருவிழா நடைபெற்றது. தலைமையாசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார்.
துளிர் வாசகர் திருவிழாவிற்க பிப்ரவரி மாத இதழ்கள் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வினை தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளரும், பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா ஒருங்கிணைத்து பேசும் பொழுது தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக தமிழில் துளிர் இதழை வழங்கி வருகிறது. ஒவ்வொரு மாணவர்களுக்கும் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு துளிர் மாத இதழ் வழங்கப்பட்டு வருகிறது.
துளிர் மாத இதழை வாசிக்கும் வண்ணம் மாதந்தோறும் வாசிப்பு திருவிழாக்கள் நடத்தப்படுறது. பிப்ரவரி மாத துளிர் இதழில் பற்றி எரியும் பிரச்சனை, மக்கள் தொகை பெருக்கம் சுற்றுச்சூழலை பாதிக்குமா?, பற்றி எரியும் கலிபோர்னியா காரணம் இயற்கையா? மனிதனா?, கருத்தனும் மறைவானும், நட்சத்திரங்களை நோக்கி, 2025 சர்வதேச குவாண்டம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆண்டு, நூறாவது ராக்கெட் வெற்றி முதல் தோல்விக்கு பிறகு அடுத்தடுத்து வெற்றி, சூரிய சக்தியில் இயங்கும் கடல் நத்தை, கணக்கு புதிர் ,பிப்ரவரி பெருமைகள், பிப்ரவரியில் பிறந்த அறிவியல் அறிஞர்கள், மலையேறும் கப்பல்கள் ,ஏழை விவசாயி, வாத்துகளை எப்படி பங்கிட்டார்? கோள்களின் அணிவகுப்பு 2025 ,சூரிய மண்டல கதை கேளு உள்ளிட்ட தலைப்புகளில் துளிர் வாசகர் திருவிழா நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் படித்து தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்தினார்கள்.
மாணவர்கள் கூறும்பொழுது அறிவியல் கருத்துக்களை எளிய வடிவில் புரிந்து கொள்ள துளிர் இதழ் உதவுகிறது. துளிர் இதழில் அறிவியல் சார்ந்த கருத்துக்களை எழுதும் வாய்ப்புகளையும் உருவாக்குகிறது என்று கூறினார்கள். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மணிமேகலை, சிந்தியா உள்ளிட்டோ கலந்து கொண்டனர்.