
உயிர் தியாகம் செய்த தலைமையாசிரியர் திரு கௌரிசங்கர் அவர்கள் உடலுக்கு தமிழ்நாடு அரசு இறுதி மரியாதை செலுத்தி அரசு அறிவித்து இருக்கின்ற நிதியை ரூ 25 லட்சமாக உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் - சா.அருணன் - கோரிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஒன்றியம் எலுவப் பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மூன்றாம் வகுப்பு மாணவன் நித்தின் பிற்பகல் 1.30 மணியளவில் அருகில் உள்ள தனியார் பண்ணை குட்டையில் தவறி நீரில் முழிகியதை அறிந்து காப்பற்ற முயற்சித்துப் போராடி மாணவனுடன் தலைமையாசிரியர் கௌரிசங்கர் அவர்களும் நீரில் மூழ்கி உயிர் இழந்தது பெரும் கோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது, இருவர் குடும்பத்தினருக்கும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மாணவனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று போராடி வீர மரணம் அடைந்த தலைமையாசிரியர் திரு. கௌரிசங்கர் அவர்களுக்கு ஒட்டுமொத்த ஆசிரியர் இனமும் வீர வணக்கம் செலுத்த வேண்டும்.
அதுமட்டும் அல்லாமல் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இரங்கல் செய்தியை வெளியிட்டு உயிர் இழந்த தலைமையாசிரியர் மற்றும் மணவன் குடும்பத்தாருக்கு நிதி உதவி அறிவித்திருப்பதை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் வரவேற்கிறது.
இருந்தபோதிலும் ரூ.3 லடசம் என்பது மிக மிக குறைவு. எனவே உயிரிழந்த தலைமையாசிரியர் குடும்பத்திற்கு அவரது சேவையைப் பாராட்டி குறைந்த பட்சம் ரூ 25 லட்சமாக அறிவிக்க வேண்டும்.
அதோடு அல்லாமல் தலைமையாசிரியர் திரு கௌரிசங்கர் அவர்களின் வீர தியாகத்தை போற்றும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தவேண்டும், ஒன்றிய அரசின் வீரத்தீர செயலுக்காக வழங்கும் ஜீவன் ரக்சா என்ற உயரிய விருதிற்கும் மாநில அரசு விருதிற்கும் அவர் பெயரை பரிந்துரைச் செய்து தலைமையாசிரியரின் தியாகத்தை போற்ற நடவடிக்கை மேற்கொள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையும் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களையும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
சிறப்பு தலைவரே
சிறப்பு தலைவரே !
தலைமையாசிரின் செயல் மிகவும் சிறப்பானது இது போன்ற தலையா பிரியர்கள் தெய்வத்திற்கு சமமானவர் தாங்கள் கோரிய இழப்பீடு தொகையை தமிழக அரசு கொடுக்க வேண்டும் மேலும் தகொடுக்க வேண்டும். குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்ற வழங்க வேண்டும்.