
நிலக்கோட்டை சிறுநாயக்கன்பட்டியில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் துவக்க விழா நடைபெற்றது.
நிலக்கோட்டை, மார்ச் 3: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பிள்ளையார் நத்தம் ஊராட்சி சிறுநாயக்கன்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் இப்பகுதியில் தற்போது நெல் பயிர்கள் அறுவடை செய்து வருவது விவசாயிகளிடமிருந்து அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் வாங்கும் பணி துவக்க விழா நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமையில் கொள்முதல் வாங்கும் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நெல் கொள்முதல் நிலைய பொறுப்பாளர் சத்தியா வரவேற்று பேசினார். விவசாயிகள் தமிழக அரசுக்கு அப்போது இந்த ஆண்டு தற்போது வயல்கள் முழுவதும் நெற்பயிர்களை விட கலைப் பயிர்கள் அதிகமான காரணத்தால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு வகையில் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். ஆகவே தற்போது கிலோ 24 ரூபாய் 50 காசுக்கு வாங்கும் நெல்லை ரூபாய் 30 ரூபாய்க்கு வாங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து நிலக்கோட்டை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் விவசாயிகளிடம் உரிய வகையில் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாத சூழ்நிலையில் விலைவாசி கிடைக்க தக்க வகையில் நடவடிக்கை மேற்கொள்ள தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்வோம் என உறுதி அளித்தார்.
இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய துணைச் செயலாளர் வெள்ளிமலை, ஒன்றிய கவுன்சிலர்கள் தியாகு, ரோஸி நெடுமாறன், திமுக மாவட்ட பொறுப்பாளர் அழகர்சாமி, சிறுநாயக்கன்பட்டி கிளைச் செயலாளர் செல்வராஜ், கிளைப் பொறுப்பாளர்கள் வீரமருதமணி, பாக்கியநாதன்,ஸ்ரீதர், முத்து மாரியப்பன், பால்ராஜ், நெல் கொள்முதல் நிலைய பொறுப்பாளர் மணிமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.