
ஏழ்மையின் உலகம் அறக்கட்டளை மூன்றாமாண்டு துவக்க விழாவை முன்னிட்டு திருச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
ஏழ்மையின் உலகம் அறக்கட்டளை மூன்றாமாண்டு துவக்க விழாவை முன்னிட்டு திருச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

10 மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு மளிகை பொருள்கள், 15 ஏழை குடும்பங்களுக்கு மளிகை பொருள்கள், 20 குழந்தைகளுக்கு கல்வி உபகரண பொருள்கள். 15 இளம் சாதனையாளர்கள் விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் திருச்சி R.D.ராஜேஸ் தலைமை தாங்கினார்,முன்னிலை மதியழகன் ரேணுகாதேவி, P.குமணண்,இரா.செந்தில் குமார் போன்றோர் முன்னிலை வகித்தனர். ஏழ்மையின் உலகம் அறக்கட்டளையின் நிறுவனர் D.விஜயேந்திரன் மற்றும் நிர்வாகிகள் K.நந்தினி,M.விஜய்,J.வேதகுமரன்,M.வினோத் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்தனர்.விழா கொடையாளர்கள் கோர்ட் வெங்கடேசன்,ஆல்வின் டைலர் போன்றோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.நாட்டுபுற நடனம்,பரதம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.