
நிலக்கோட்டையில் முதல்வர் மருந்தகம் துவக்க விழா.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கூட்டுறவு சார் பதிவாளர், கூட்டுறவு செயலாட்சியர் (பொறுப்பு) கார்த்திகை செல்வி தலைமையில் தமிழக முதல்வர் மருந்தகம் திறப்பு விழா நடைபெற்றது.
நிலக்கோட்டை கூட்டுறவு சங்க செயலாளர் மதிவாணன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக நிலக்கோட்டை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் கலந்து கொண்டு முதல்வர் மருந்தக திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை திமுக நகர செயலாளர் ஜோசப்,சரக மேற்பார்வையாளர் பாஸ்கரன், மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் வசந்தி தெய்வேந்திரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் அறிவு, தியாகு, ரோஸி நெடுமாறன் மற்றும் திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.