April 16, 2025
திட்ட செயல்பாடுகள் கள ஆய்வு.

திட்ட செயல்பாடுகள் கள ஆய்வு.

சிவகங்கை:

வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை மற்றும் போக்குவரத்துத் துறை சார்பில், திட்ட செயல்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் இரா.கஜலட்சுமி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித்,
களஆய்வுகள் மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அரசு அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் மேற்கொண்டார்.

சிவகங்கை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் இரா.கஜலட்சுமி , வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை மற்றும் போக்குவரத்துத் துறை சார்பில் திட்ட செயல்பாடுகள் குறித்து,  மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், துறை ரீதியான களஆய்வுகள் மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட துறை அரசு அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் மேற்கொண்டார்.


இந்ந ஆய்வின்போது, வருவாய்த்துறையின் சார்பில், மானாமதுரை வட்டத்திற்குட்பட்ட கிருஷ்ணராஜபுரம் காலனி நகர்புறப்பகுதிகள் மற்றும் இளையான்குடி வட்டத்திற்குட்பட்ட கீழாயூர் நகர்புறப்பகுதி ஆகிய பகுதிகளில் ஆட்சேபணையற்ற புறம்போக்குகளில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக வீடுகட்டி குடியிருந்து வரும் தகுதியான ஆக்கிரமிப்புதாரர்களுக்கு வரன்முறை செய்து ஒருமுறை திட்டத்தின்கீழ் பட்டா வழங்கும் புலம் பணிகள் தொடர்பாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் , கூட்டுறவுத்துறையின் சார்பில், தமிழகம் முழுவதும் விரைவில் திறந்து வைக்கப்படவுள்ள முதல்வர் மருந்தகம் தொடர்பாக சிவகங்கை வட்டம் காஞ்சிங்கால் ஊராட்சியில் அமையவுள்ள முதல்வர் மருந்து கிட்டங்கினையும், மற்றும் இளையான்குடி பேரூராட்சி, மானாமதுரை நகராட்சி மற்றும் திருப்புவனம் ஆகிய பகுதிகளில் அமையவுள்ள முதல்வர் மருந்தகம் தொடர்பான பணிகள் குறித்தும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, போக்குவரத்து துறையின் சார்பில் புதிய மினி பஸ் திட்டத்தின் கீழ் முத்தனேந்தல், இடைக்காட்டூர், பாப்பாக்குடி ஆகிய ஊராட்சிகள் மற்றும் வேலூர் சிப்காட் வழியாக மானாமதுரை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் வரை செல்லும் புதிய மினி பஸ் செல்லும் வழித்தடங்கள் தொடர்பாக நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதன்பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை மற்றும் போக்குவரத்துத் துறை ஆகிய துறைகளில் கண்காணிப்பு அலுவலர் / மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் இரா.கஜலட்சுமி
மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், முதன்மை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில், மேற்கண்ட துறைசார்ந்த அலுவலர்கள் தங்களது துறைரீதியாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றம் திட்ட செயல்பாடுகள் குறித்து புள்ளி விவரங்களுடன் விரிவாக எடுத்துரைத்தனர்.

அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களை அரசின் கவனத்திற்கு ஏடுத்துச்சென்று உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு ஏதுவாக விரிவான அறிக்கை சமர்ப்பிக்கும்படி, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் இரா.கஜலட்சுமி அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வுகளில, தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.எஸ்.செல்வசுரபி, இணைப்பதிவாளர் (கூட்டுறவுசங்கங்கள்) இராஜேந்தி பிரசாத், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துக்கழுவன்,
மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார், வட்டார போக்குவரத்து அலுவலர் கருப்பனன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.