
அரசு கள்ளர் பள்ளிகளில் ஆசிரியர் காலி இடங்களை நிரப்ப கோரி நிலக்கோட்டை பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு முதலமைச்சருக்கு மனு.
நிலக்கோட்டை, பிப்.23- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு சார்பாக தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டது:- அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் உள்ள மதுரை,திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகள் மதுரையில் செயல்பட்டு வரும் சீரமைப்பு துறையின் கீழ் இன்றுவரை உள்ளது.
இங்கு பள்ளிகளில் பள்ளி மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக அரசு நடத்திய பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிகளவு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் முதலிடத்தில் அரசு கள்ளர் பள்ளி மாணவர்கள் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இன்னும் கள்ளர் பள்ளிகளின் வளர்ச்சியை மேம்படுத்த கள்ளர் சீரமைப்புத் துறையில் இருக்கக்கூடிய குறைபாடுகளை சரி செய்ய தமிழக அரசு உடனடியாக கள்ளர் சீரமைப்பு துறைகளில் பல் இடைநிலை ஆசிரியர்கள், நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் சுமார் 200க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளது.
இதனால் பள்ளிகளில் பெற்றோர்கள் குழந்தைகளை சேர்ப்பதற்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இதனை சரி செய்ய உடனடியாக அரசு ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதேபோன்று நிர்வாகத்தை கள்ளர் சீரமைப்பு துறைக்கு தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் நியமிக்க வேண்டும் என்று பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு சார்பாக வேண்டுகோள் வைக்கிறோம் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிலக்கோட்டை பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு மாநில பொருளாளர் இளங்கோ கூறியதாவது:- அரசு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கள்ளர் சீரமைப்பு துறையின் கீழ் செயல்படும் அரசு கள்ளர் பள்ளிகளுக்கு ஆசிரியர் பணி நியமனம் அறவே புறக்கணித்து கள்ளர் பள்ளிகளை மூடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இது ஒருவகையில் பழிவாங்கும் நடக்கடிக்கையாகும் எனவே உடனடியாக பத்தாண்டுகளாக இடைநிலை, நடுநிலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இது குறித்து பல்வேறு கட்ட முறையான அகிம்சை போராட்டம் நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.