July 30, 2025
பழனி தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை ஆசைகாட்டியதாக புகார்.

பழனி தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை ஆசைகாட்டியதாக புகார்.

பழனி தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை ஆசைகாட்டியதாக புகார். பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு. முறையாக மருத்துவ சிகிச்சை அளித்தும் குறை பிரசவத்தால் குழந்தை இறந்ததாக மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி குமரேசன். இவரது மனைவி மகேஸ்வரி(30) மீண்டும் 4வது முறையாக கருத்தரித்து உள்ளார்‌.

6மாத கர்ப்பிணியான மகேஷ்வரியின் வயிற்றில் இரட்டைக்குழந்தை இருந்துவந்தது‌. இந்நிலையில் நேற்று உடல்நிலை மோசமடைந்த மகேஷ்வரியை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது வயிற்றில் இருந்த இரட்டை குழந்தைகளும் உயிரிழந்துவிட்டதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளை வெளியே எடுத்து மகேஷ்வரியின் உயிரை காப்பாற்றினர்.

இந்நிலையில் மகேஸ்வரியின் கணவர் குமரேசன் தனது மனைவியின் உடல்நலம் பாதிக்கப்பட்டதற்கு பழனியில் உள்ள கருத்தரித்தல் மைய மருத்துவமனையே காரணம் எனக்கூறி உறவினர்களுடன் பழனியில் உள்ள தனியார் கருத்தரித்தல் மையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது‌.

அப்போது அவர் கூறியதாவது:- பழனியில் உள்ள பிரபல தனியார் கருத்தரித்தல் மையத்தில் தனது மனைவிக்கு சிகிச்சை பெற்றதாகவும், ஆண்குழந்தை வேண்டும் என்று கூறிதான் சிகிச்சைக்கு வந்ததாகவும், ஆனால் அவளது வயிற்றில் இரட்டை குழந்தை உருவாகிவிட்டதாகவும், அதில் ஒன்று பெண்குழந்தை உள்ளது என்றும், தங்களுக்கு ஆண்குழந்தை பெற்றுத் தருவதாக மருத்துவமனை நிர்வாகம் உறுதி அளித்தது என்றும், ஆனால் என்மனைவியின் வயிற்றில் பெண்குழந்தையை ஏன் வைத்தார்கள் என்றும் கேட்டு அதிரவைத்தார்

மருத்துவமனையின் பேச்சை நம்பி இதுவரை 7லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில் , தற்போது தனது மனைவியின் வயிற்றில் உள்ள குழந்தைகள் இரண்டும் இறந்து விட்டதாகவும், இதற்கு மருத்துவமனையின் தவறான சிகிச்சையே காரணம் என்றும், எனவே மருத்துவமனை நிர்வாகத்தின்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் மருத்துவர் செந்தாமரைச் செல்வியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது :- கடந்த 2021ம் ஆண்டு தன்னை அணுகிய குமரேசன்-மகேஷ்வரி தம்பதியினர் தங்களுக்கு 3குழந்தைகள் இருப்பதை மறைத்து தங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதாகவும், அதில் ஒரு குழந்தை இறந்து விட்டதாகவும் தெரிவித்தனர்.

எனவே மகேஷ்வரிக்கு செய்திருந்த கருத்தடையை நீக்கி சிகிச்சை அளித்தோம். தொடர்ந்து அவர்கள் இயற்கையாக கர்ப்பம் தரிக்காததால் மீண்டும் கணவன் மனைவி இருவரும் தன்னை அணுகியதால், மகேஷ்வரியை உடல் பரிசோதனை செய்து செயற்கை முறையில் கருத்தரித்தல் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் இரட்டைக் குழந்தை உருவாகி சிகிச்சை பெற்றவந்தார்‌. கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18ம்தேதி சிகிச்சை பெற்றுச் சென்ற மகேஷ்வரி அதற்பிறகு சிகிச்சைக்கு வரவில்லை என்றும், இதுவரை சிகிச்சைக்காக இரண்டரை லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தியுள்ளார் என்றும் தெரிவித்தார். மேலும் தற்போது மகேஷ்வரிக்கு குறைப்பிரசவம் ஏற்பட்டுள்ளது என்றும், ஆனால் இது மருத்துவத்துறையில் சகஜமானது என்றும், அதற்காக மருத்துவமனை மீது குற்றம் சுமத்துவது தவறு என்றும் தெரிவித்தார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழனி நகர போலீசார் பாதிக்கப்பட்ட நபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து மருத்துவர் அளித்த விளக்கத்தை ஏற்ற குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரும் சமாதானமாகி கலைந்து சென்றனர். இதனால் அபப்குதியில் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *