May 6, 2025
உயிரிழப்பு இல்லாமல் பட்டாசு தயாரிக்கும் காலம் கணிய வேண்டும். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டி.

உயிரிழப்பு இல்லாமல் பட்டாசு தயாரிக்கும் காலம் கணிய வேண்டும். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டி.

உயிரிழப்பு இல்லாமல் பட்டாசு தயாரிக்கும் காலம் கணிய வேண்டும்., அதற்கு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
என, சிவகாசி வெடிவிபத்து தொடர்பாக உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டி:

உசிலம்பட்டி:

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பன்னியான், முதலைக்குளம், கொடிக்குளம், கோவிலாங்குளம் பகுதியில்
அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்களின் ஆலோசனைக்கூட்டம், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்:
சிவகாசியில் வெடிவிபத்து நடத்தது துயர சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது., உயிரிழப்புகளை தவிர்க முடியாது என்று தினந்தோறும் செய்திகளிலேயே பார்க்கிறோம்.

ஆனால், உயிரிழப்பு இல்லாமல் பட்டாசு தயாரிக்கும் காலம் கணிய வேண்டும்.
அதற்கு இந்த அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

முதல்வர் ஸ்டாலின் விருதுநகருக்கு வரும் போது , நேரடியாக பட்டாசு ஆலையை சென்று பார்த்தார்கள் அது ஒரு போட்டோ சூட் நிகழ்வாகவே அமைந்ததே தவிர,
எந்த பிரச்சினைக்குமே தீர்வு காண்பதாக இல்லை.

விளம்பரம், விளம்பரம் இதில் தான் அக்கறை செலுத்துகிறார்களோ, கவனம் செலுத்துகிறார்களோ தவிர, ஒரு பிரச்சனைக்கு என்ன தீர்வு பார்ப்பது செய்தி, அதை பற்றி ஆய்வு செய்வது செய்தி. ஆனால், தீர்வு கிடைக்கவில்லை. இந்த 4 ஆண்டுகளில் எத்தனை விபத்து, விபத்து தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

ஆனால், விபத்தை குறைக்கலாம், உயிரிழப்பு இல்லாமல் செய்யலாம் அதை தான் மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால், முதல்வர் வருகிறார், பார்க்கிறார், சென்றுவிடுகிறார் மக்களுக்கு எந்த தீர்வும் கிடைப்பதில்லை. இது மட்டுமல்ல எல்லாமே, எந்த பிரச்சனைக்கும் தீர்வு இல்லை, மின்சார கட்டணம், சொத்து வரி உயர்வால் சொல்ல முடியாத துயரத்தில் மக்கள் இருக்கிறார்கள்.

மின்சார கட்டணத்தை உயர்த்துவதற்கு முன்பே போராட்டம் நடத்தினார்கள், ஆட்சிக்கு வந்த பின் மூன்று முறை உயர்த்தி உள்ளனர், உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா என்ற திரைப்பட கதையாக தான் இருக்கிறது.

70% வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன், 90% நிறைவேற்றி விட்டேன் என சொல்கிறார், எதை நிறைவேற்றினார்கள்.

100 நாள் வேலை முதல் ஆசிரியர்களின் பழைய ஓய்வூதியத்தை பெற்று தருவேன் என்பது வரை எதை நிறைவேற்றினீர்கள், மக்களை என்ன நினைக்கிறார் மு.க.ஸ்டாலின் என தெரியவில்லை.

அதற்கு தான் கிளைக் கழகங்களை வழுப்படுத்தி வருகிறோம், அதிமுக துவங்கி கைகுழந்தையாக இருந்த போது வெற்றி பெற்ற இடம் இந்த பழைய திண்டுக்கல் தொகுதியில் உசிலம்பட்டி, சோழவந்தான், திருமங்கலம் தொகுதி அந்த தொகுதியில் களப்பணி செய்து வருகிறோம், அடித்தளத்தை அமைத்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக அரசு மலர்வதற்கான பணிகளை செய்து வருகிறோம்.,
சசிக்கலா உசிலம்பட்டி வருகை குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் நழுவி சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.