April 16, 2025
காரத்தொழுவு கிராமத்தில் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய எம்.எல்.ஏ மகேந்திரன்

காரத்தொழுவு கிராமத்தில் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய எம்.எல்.ஏ மகேந்திரன்

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய எம்.எல்.ஏ மகேந்திரன்

மடத்துக்குளம் அடுத்துள்ள காரத்தொழுவு கிராமத்தில் அஇஅதிமுக கட்சியின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் மாபெரும் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது‌.

முன்னதாக அருள்மிகு அழகுநாச்சியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் , அலங்காரம் , பூஜைகள் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும் , திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் சி.மகேந்திரன் அம்மனை தரிசனம் செய்தார். இதனையடுத்து அன்னதானம் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு உணவுகளை பரிமாறினார்.

அதனை தொடர்ந்து அவர் கூறியதாவது. இந்து சமய அறநிலையத்துறை சார்பாக அழகுநாச்சியம்மன் கோயிலில் நாள்தோறும் 25 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இது மிக குறைவான எண்ணிக்கை ஆகும். குறைந்தது நூறு பேருக்கு அன்னதானம் வழங்க வேண்டும். அது சம்பந்தமாக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சருக்கு கடிதம் மூலமாக தெரிவிக்கப்பட்டு, விரைவில் நூறு பேருக்கு நாள்தோறும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனக்கூறினார்.

மேலும் அக்கட்சியின் சார்பில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் மடத்துக்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் காளீஸ்வரன் ,திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கைத்தறி நெசவாளர் அணி செயலாளர் கண்ணன் (எ) ஆர்.கேபாலகிருஷ்ணன், தாராபுரம் நகர கழக செயலாளர் சி.ராஜேந்திரன் , மடத்துக்குளம் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் எஸ்.சரவணகுமார், கணியூர் பேரூர் கழக செயலாளர் டி.சரவணன், கே.என்.சண்முகசுந்தரம் வடக்கு ஒன்றிய விவசாய அணித்தலைவர் , வடக்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் கிருபானந்தன் , வடக்கு ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் செல்வகுமார், கலை இலக்கிய அணி செயலாளர் செல்லமுத்து, துணை செயலாளர் சதீஷ்குமார் மற்றும் காரத்தொழுவு கிளைக் கழக செயலாளர்கள் நடராஜ் , கோவிந்தராஜ் , ராசலிங்கம், செந்தில் ( எ ) பொன்னுச்சாமி , பாலசுப்பிரமணியம் , கிருஷ்ணன் , தங்கராஜ் , செல்வராஜ் மற்றும் அக்கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.