
புற முதுகு காட்டி ஓடிய எடப்பாடி பழனிச்சாமி!
ஈரோடு தொகுதியில் தானாக புற முதுகு காட்டி ஓடிய எடப்பாடி பழனிச்சாமி
திட்டவட்டமாக திமிராக நிலை நிறுத்திய திமுக அரசியல் பின்னணி என்ன! வாக்காளர்களை எப்போது சிந்திக்கப் போகிறீர்கள்! விவரிக்கிறது அலசல்.
தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த காலத்திற்குப் பின்பு திராவிடம் என்ற பெயர் சொன்னபோது காலத்தில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா வழியில் திமுகவினர் ஆட்சியைப் பிடித்தனர். அதற்குப் பின்பு எம்ஜிஆர் பெயரில் தமிழகத்தில் புதிதாக தோன்றிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இடைத்தேர்தலில் அதுவும் பாராளுமன்ற இடைத்தேர்தலில் அதிமுக என்ற ஒரு கட்சியே உருவான காலகட்டத்தில் இடைத்தேர்தல் என்று பாராமல் மாயத்தேவர் என்ற ஒரு நபரை திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் நிறுத்தி தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவாகியது அதிமுக. இது உண்மையா? இல்லையா? என்பதை வரலாறு கூறும். அப்படிப்பட்ட காலகட்டத்தில் எம்ஜிஆருக்கு பின்பு தமிழகத்தில் இரண்டாக அதிமுக பிரிக்கப்பட்டது அப்போதும் அதிமுக பின்னடைவை சந்தித்தது இதை உணர்ந்த அரசியல் வல்லமையும் ஆளுமையும் கொண்ட ஜெயலலிதா மிகப்பெரிய அளவில் தன்னெழுச்சியாக தமிழகத்தில் மீண்டும் எழுந்து திமுகவை தோற்கடித்து முதலமைச்சரானார் உண்மையா? இல்லையா? இதை போன்று தான் திமுக பலமுறை தன்னுடைய வல்லமையை நிரூபிக்க ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் ஒரு பலமுறை போராடியும் தோற்றது உண்டு. ஆனால் நடைமுறை மாறி காலங்கள் மாறி செயல்பாடுகள் மாறிப்போன காலகட்டத்தால் முதலமைச்சராக இருந்தபோது எம்ஜிஆர் ஜெயலலிதாவும் தமிழகத்தை விட்டு மறைந்து போனார்கள் என்பது வரலாறு. அப்படிப்பட்ட காலகட்டத்தில் மீண்டும் அதிமுகவை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெற செய்யக்கூடிய ஒரு மிகப்பெரிய சக்தியாக அதிமுகவின் பொதுச்செயலாளராக அதிமுகவில் உள்ள அனைவருடைய ஒப்புதலோடு தமிழகமே திரும்பிப் பார்க்கக் கூடிய ஒரு வல்லமையாக சசிகலா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அந்தச் சூழ்நிலையில் சட்டை சிக்கலில் ஒரு சிறு தவறு நிகழ்ந்ததால் அதனுடைய வல்லமை நம்பிக்கையினுடைய வல்லமை எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார் உண்மையா? இல்லையா! வாக்காளர்களை நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும். அந்தக் காலகட்டத்திலும் எம்ஜிஆர் காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும் ஒருபோதும் புரட்சித் தலைவர் கட்சி ஆரம்பித்த போது இருந்து புறமுதுகு காட்டி ஓட வில்லை. இடைத்தேர்தலை சந்தித்து போராடி வெற்றி கண்ட சம்பவங்களும் உண்டு. அப்படிப்பட்ட அரசியலில் தமிழகத்தினுடைய கைக்கூலியான அதிமுகவினுடைய பொதுச் செயலாளராக தன்னைத்தானே அறிவித்துக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி ஈரோடு தொகுதியில் ஒரு நபரை நிறுத்துவதற்கு துப்பில்லையா? அதிமுக பலவீனம் ஆகிவிட்டதா? அப்படிப்பட்ட காலகட்டத்தில் இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று ஒரு வார்த்தையை சொல்லி ஒட்டுமொத்த அதிமுகவில் மாற்றி உள்ளார் எடப்பாடி பழனிச்சாமி என்ற குற்றச்சாட்டை இந்த நேரத்தில் பதிவு செய்கிறோம். இது ஒரு புறம் இருக்க திமுக தலைமை ஈரோடு இடைத்தேர்தல் தமிழகத்தினுடைய ஆட்சிக்கு மதிப்பெண்களைக் கொண்டதாக விளங்குகிறது என்று தேர்தல் இன்னும் நடக்கவே இல்லை அதற்குள் இப்படி ஒரு விமர்சனத்தையும் இப்படி ஒரு விளம்பரத்தையும் மக்கள் மத்தியில் பரவலாக அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறார். ஆகையால் இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் இந்தியாவின் மிகப்பெரிய ஆட்சி செய்யக்கூடிய பாரதிய ஜனதா கட்சியும் புறக்கணித்து இருக்கிறது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம் – தேர்தல் என்றால் அனைத்து கட்சியினரும் போட்டியிட வேண்டும் அதில் வெற்றி தோல்வி என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும். அப்படிப்பட்ட காலத்தில் எந்த வகையிலும் மிகப் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய அதிமுக பாரதிய ஜனதா மற்றும் சில கட்சிகள் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டிய அவசியம் என்ன. இது சரியான முடிவு அல்ல. இதனை வாக்காளர்களாகிய நீங்கள் சாதாரண எளிய ஏழை மக்களாக போட்டியிட்டல் யாராவது ஒரு வேட்பாளரை தேர்வு செய்தால் நிச்சயமாக ஒரு மறுமலர்ச்சி ஏற்படுத்த முடியும். என்பதை மக்கள் மத்தியில் பதிவு செய்துவிட்டு. ஒரு சிறிய கேள்வியை மட்டும் தங்கள் மத்தியில் பதிவு செய்கிறோம். என்னவென்றால் திமுக அதிமுக பாரதிய ஜனதா கூட்டாக சேர்ந்து கொண்டு மக்கள் உறவ ஆட்சி செய்கிறதா என்ற கேள்வியை மக்கள் வாக்காளர்கள் மத்தியில் பரவலாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் தமிழகத்தினுடைய ஈரோடு தொகுதியில் புலங்கும் பணப்புழக்கம் வெல்லும் என்பதில் எந்த விதமான மாற்றமும் இல்லை. மக்களே மக்களால் ஆட்சி எப்போது நடக்கப் போகிறது என்ற அந்த மக்களாட்சியை எப்போது மக்களே நீங்கள் உருவாக்க போகிறீர்கள் என்ற கேள்வியை என் மனசாட்சி கேட்கிறது மனசாட்சிக்கு பதில் சொல்ல ஒரு குடிமகன் முன்வருவார்களா இது இன்று நடக்கின்ற தேர்தல் தான் முடிவு செய்யும் என்பதை வருகிற காலங்களுக்கு வரலாறாகட்டும் என்ற நிலையில் எங்களுடைய மனது பறவைகளாக பாலைவன பறவைகளாக பறக்கட்டும் என்று சொல்லி இந்தத் தருணத்தை பேசி முடிக்கிறோம் நன்றி வணக்கம்.