March 2, 2026
மல்லிகை பூ.

மல்லிகை பூ.

வாழ்க்கையின் ஒவ்வொரு பருவங்களிலும்
அதற்கமைய புதிதாகவே மலர்கிறேன். சூழ்நிலைகள் மாறும் போது
துவண்டு போவதும்,
வீழ்ந்து போவதும்,
வாடி வீழ்வதும் வாழ்க்கை அல்ல.

தினமும் புதிதாய் மலர வேண்டும்,
புதிய வாசம் வீச வேண்டும்,
புன்னகையோடு கடக்க வேண்டும். வாழ்தலின் அர்த்தங்கள் அழகானவை! அவை ரம்மியமானவை!
எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி பூத்துக் குலுங்குவதில் எந்த நஷ்டமும் வரப்போவதில்லை.

தோல்வியே வந்தாலும் வெற்றியை நோக்கி ஓடுவதே அற்புதம் ஏனெனில் தேங்கி நிற்கும் குளம் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அதில் அழுக்கு தான் இருக்கும்.

சின்ன ஒடையாக இருந்தாலும் அந்த தண்ணீர் கண்ணாடி போல் இருக்கும். வாழ்க்கையில் தோல்வி வந்தாலும் எந்த இடத்திலும் இதுதான் என் இடம் என நின்று விடக்கூடாது.

பலமுறை தோல்வி கண்டாலும் மனப்பதட்டம் வரும் ஆனால் அப்போது எடுக்கிற ஒய்வு கூட ஒரு நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருப்பது போல் தான் இருக்கவேண்டும்.
எந்த ஓய்வும் நம்முடைய அடுத்த பயணத்திற்கான ஆயத்தம் தான்.

நாம் தாமதிக்கலாம். ஆனால் நேரம் தாமதிக்காது நல்ல வாய்ப்புக்கள் நம்மை தேடி வராது. வாய்ப்புக்களே உருவாக்கி கொண்டு நேரத்தின் வேகத்திற்கேற்ப நாமும் நகர்ந்து செல்வதே சிறப்பானது. அதுவே வெற்றியைத்தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *