May 6, 2025
காரியாபட்டி அருகே சேது பொறியியல் கல்லூரியில் காய்கறி திருவிழா

காரியாபட்டி அருகே சேது பொறியியல் கல்லூரியில் காய்கறி திருவிழா

விருதுநகர் மாவட்டம், வேளாண்மை துறை – தோட்டக் கலைத்துறை மற்றும் சேது பொறியியல் கல்லூரி வேளாண்மை துறை சார்பில் காய்கறி திருவிழா மற்றும் செயல் முறை விளக்க கண்காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, சேது பொறியியல் கல்லூரி தலைவர் மற்றும் நிறுவனர் .

முகமது ஜலில் தலைமை வகித்தார். விருதுநகர் மாவட்ட ஆட் சியர் ஜெயசீலன், காணொளி மூலம் கருத்தரங்கினை தொடங்கி வைத்து பேசினார். விருதுநகர் மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனர் விஜயா , குத்துவி ளக்கு ஏற்றினார்.

தோட்டக் கலை துணை இயக்குனர் சுபா வாசுகி வரவேற்புரை வழங்கினார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசா யம்) நாச்சியார் அம்மாள். வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர்கள் செல்வி ரமேஷ், பாலசுப்பிரமணியன், கிருஷ்ணகுமார் ஆகியோர் கருத்தரங்கில் பேசினர்.

தோட்டக்கலைத்துறை. வேளாண்மைத் துறை, மீன் வளத்துறை, பட்டு வளர்ச்சி துறை, தனியார் நிறுவனங்கள் மூலம் திடல்கள் அமைக்கப் பட்டு காட்சிக்கு வைக்கப்பட் டது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை தோட்டக்கலை, வேளாண் துறை உதவி இயக்குனர்கள் கார்த்திக், கீதா, சேது பொறி யியல் கல்லூரி வேளாண்மை பொறியியல் துறை தலைவர் முத்துச்சோலை மற்றும் பேரா சிரியர் அய்யனார் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.