March 2, 2026
பேரறிஞர் அண்ணா நினைவு நாள் : திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை

பேரறிஞர் அண்ணா நினைவு நாள் : திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை

தேனி மாவட்டம் பெரியகுளம் தேனி வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 57 வது நினைவு தினத்தினை முன்னிட்டு பெரியகுளம் நகர் கழக அலுவலகத்தில் இருந்து பழைய பேருந்து நிலைய வளாகப் பகுதியில் உள்ள அண்ணா சிலை வரை திமுக வினர் ஊர்வலமாக சென்று பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு தேனி வடக்கு மாவட்ட கழக செயலாளர், தேனி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் தலைமையில் மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினர்.

தேனி வடக்கு மாவட்ட கழக அவைத் தலைவர் செல்ல பாண்டியன், பெரியகுளம் நகர் கழக செயலாளர் முகமது இலியாஸ்,பெரியகுளம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எல்,எம். பாண்டியன்,பெரியகுளம் நகர்மன்ற தலைவர் சுமிதா சிவகுமார், முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர் தங்கவேல், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ஸ்டீபன்,விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் கார்த்திக், தாமரைக்குளம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி, தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜ், வடுகபட்டி பேரூராட்சி தலைவர் நடேசன்,வழக்கறிஞர் அணி மாவட்ட துணை தலைவர் முத்துசாமி, நகர சுற்றுச்சூழல் அணி பழனிக்குமார் உட்பட கழக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள், இளைஞரணி மற்றும் மாணவரணியினர், தொழிற்சங்க நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட, நகர, ஒன்றிய ,பேரூர் கழக நிர்வாகிகள் கழக தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *