
பாரப்பட்டி ஊராட்சி சரந்தாங்கியில் ரூபாய் 81 லட்சம் மதிப்பில் பள்ளி கட்டிடத்திற்கு பூமிபூஜை நிகழ்ச்சியில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம்.எல்.ஏ கலந்துகொண்டார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் பாரப்பட்டி ஊராட்சி சரந்தாங்கி கிராமத்தில் நான்கு வகுப்பறைகளை கொண்ட பள்ளிக்கட்டிடம் ரூபாய் 81 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்ட சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம் எல் ஏ கலந்துகொண்டு பூமிபூஜை நடைபெற்றது.
இதில் ஒன்றிய செயலாளர்கள் தனராஜ் பரந்தாமன் பொதுக்குழு உறுப்பினர் முத்தையன் பாலமேடு பேரூராட்சி செயலாளர் மனே கரவேல் பாண்டியன் அலங்காநல்லூர் பேரூராட்சி சேர்மன் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் பாலமேடு பேரூராட்சி சேர்மன் சுமதி பாண்டியன் யூனியன் ஆணையாளர் வள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பம் பாரப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விஜயலெட்சுமி/மற்றும் சடையன் இளைஞர் அணியினர்கள் சந்தன கருப்பு. பிரதாப். தண்டலை சதீஷ். யோகேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.






