March 2, 2026
பேரறிஞர் அண்ணா நினைவு நாள் : அதிமுக ஓ.பி.எஸ் அணி சார்பில் மாலை அணிவித்து மரியாதை

பேரறிஞர் அண்ணா நினைவு நாள் : அதிமுக ஓ.பி.எஸ் அணி சார்பில் மாலை அணிவித்து மரியாதை

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அஇ அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆணைக்கிணங்க பெரியகுளம் நகர் கழக செயலாளர் அப்துல் சமது, நகர் கழக துணைச் செயலாளர், நகர்மன்ற உறுப்பினர், ஓ. சண்முக சுந்தரம் தலைமையில், கழக அமைப்புச் செயலாளர் மஞ்சுளா முருகன், என். வி. ராதா , ஒன்றிய கழக செயலாளர் செல்லமுத்து ஆகியோர் முன்னிலையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 57 வது நினைவு தினத்தினை முன்னிட்டு பெரியகுளம் பழைய பேருந்து நிலைய வளாகப் பகுதியில் உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள்,வார்டு செயலாளர்கள்,மாவட்ட பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட, நகர, ஒன்றிய ,பேரூர் கழக நிர்வாகிகள் கழக தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *