
கல்வராயன்மலை பழங்குடியின விவசாயிகளுக்கு மலர்கள் சாகுபடி குறித்து பயிற்சி
சேலம் மாவட்டம் கல்வராயன்மலையில் தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை மற்றும் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் (ICAR-IIHR) -பெங்களூர் இணைந்து தொல்குடியினர் வேளாண்மை மேலாண்மை திட்டம் -ஐந்திணை மூலம் கல்வராயன்மலை பழங்குடியின விவசாயிகளுக்கான இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் மலர்கள் சாகுபடி குறித்து பயிற்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.

இப்பயிற்சியில் இந்தியதோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் முதுநிலை விஞ்ஞானிகள் முனைவர் H P.சுமங்கலா R.செந்தில்குமார் மற்றும் முனைவர் V.சங்கர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு மலர்கள் சாகுபடி குறித்து விரிவாக பயிற்சி அளித்தனர். இப்பயிற்சியின் மூலம் மலர்கள் உற்பத்தி அதிகரிக்க செய்தல், இயற்கை முறையில் மலர்களை உற்பத்தி செய்வதன் மூலம் பழங்குடியின விவசாயிகள் மும்மடங்கு வருமானத்தை ஈட்டுவதற்கான வழிவகுக்குறது என்று விஞ்ஞானிகள் கூறினர். இந்நிகழ்ச்சியில் பழங்குடியினர் நலத்துறை கௌரவ ஆலோசகர் முனைவர் D.பாலு ,சேலம் மாவட்ட பூர்வ மலை பழங்குடியினர் சங்க நிர்வாகிகள், 50 மேற்பட்ட விவசாயிகள், கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
இறுதியில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் உயர் விளைச்சல் தரக்கூடிய அர்கா சவி மற்றும் அர்கா பரிமளா ரோஜா மலர் & அர்கா பானு செண்டுமல்லி மலர்கள் மேலும் இயற்கை இடுபொருள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை விவேகானந்தா அறக்கட்டளை மற்றும் கல்வராயன் மலை பூர்வமலை பழங்குடியினர் சங்கம் செய்திருந்தன.