April 19, 2025
பழனியில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேரில் ஒருவருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 1 ஆண்டு சிறை, ரூ.1,01,000 அபராதம் மற்றொருவருக்கு 6 ஆண்டுகள் சிறை, ரூ.60 ஆயிரம் அபராதம்

பழனியில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேரில் ஒருவருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 1 ஆண்டு சிறை, ரூ.1,01,000 அபராதம் மற்றொருவருக்கு 6 ஆண்டுகள் சிறை, ரூ.60 ஆயிரம் அபராதம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்து 2023-ம் ஆண்டு பாலியல் வன்புணர்வு செய்து அதை செல்போனில் பதிவு செய்து மிரட்டிய பழனியை சேர்ந்த சுந்தரம்(55), தேவா(21) ஆகிய 2 பேரை பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று நீதிபதி வேல்முருகன் அவர்கள், சுந்தரத்திற்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 1 ஆண்டு சிறை, ரூ.1,01,000 அபராதம் தேவாவிற்கு 6 ஆண்டுகள் சிறை, ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.