
குடியரசு தின விழாவில் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளைக்கு பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளையானது பொதுமக்களுக்கும் பள்ளிக் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கும் மலைப்பகுதியில் உள்ள ஏழை எளிய கிராமம் பொதுமக்களுக்கும் மற்றும் உடுமலை, பொள்ளாச்சி, பழனி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் உள்ள வறுமை கோட்டிற்கு கீழே உள்ள ஏழை மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும், கல்வி ஊக்கத் தொகையும் பல்வேறு வகையான சமூக சேவைகளை செய்து வருகிறது.
அதனை பாராட்டும் விதத்தில் குடியரசு தின விழாவில் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.பா., அவர்கள் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் எஸ்.ஏ.ஐ.நெல்சன் அவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டது.
உடன் மகளிர் திட்ட இயக்குனர் சாம் சாந்தகுமார், திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் திரு கே.கார்த்திகேயன் மற்றும் திருப்பூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. யாதவ் கிரிஷ் அசோக் இ.கா.ப., ஆகியோர் பங்கேற்றனர்.