April 19, 2025
பெரியாரிடம் ஆசீர்வாதம் பெற்றவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா

பெரியாரிடம் ஆசீர்வாதம் பெற்றவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா

அதிமுகவுடன் கூட்டணி வரும் கட்சிகள் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ள வேண்டும்: பெரியாரிடம் ஆசீர்வாதம் பெற்றவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா!

அரிட்டாப்பட்டியில் முதலமைச்சர் அரசியலும் அவ்வியலும் செய்தார்.

அதிமுக திமுக இணைப்பதற்கு எம் ஜி ஆர் முயற்சி செய்தார் என்று துரைமுருகன் பொய்யான தகவலை பரப்பி வருகிறார் . முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி அளித்தார். மதுரை பரவை பேரூராட்சி ஊர்மெச்சிகுளம் பகுதியில் சுத்தரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் மற்றும் அண்ணா நகர் புதிய பேருந்து நிறுத்த நிழற்குடை முன்னாள்அமைச்சர் செல்லூர் ராஜு திறந்து வைத்தார்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்:
பெரியார் ஆசீர்வாதம் பெற்றவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. பெண் விடியல் கிடைக்கும் வகையில் ஜெயலலிதா அவர்கள் பெண் சிசுக்கொலையை தடுக்கும் வகையில் தொட்டில் குழந்தை திட்டம் கொண்டு வந்தார்.

பெண் குழந்தைகள் படிக்க வேண்டும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் எடுக்க வேண்டும் என்று நினைத்தவர் தந்தை பெரியார் அதை நிறைவேற்றியவர் ஜெயலலிதா. தந்தை பெரியாரின் கொள்கையை அம்மா பின்பற்றினார். திராவிட இயக்கத்திற்கு தலைமை பிராமின் பெண்ணாக நான் இருக்கிறேன். அதுதான் ஜனநாயக இயக்கம் என்று அம்மாவை கூறினார்.

தவறான தகவலை சொல்லி வருகிறார். துரைமுருகன் அதிமுகவை திமுகவுடன் இணைப்பதற்கு எம் ஜி ஆர் முயற்சி செய்தார் இது முழு பூசணிக்காவை சோற்றில் மறைப்பதற்கான சம்பவம் அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை. அதிமுக ஆரம்பத்தில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டபோது, திமுக நிர்வாகிகள் கலைஞரிடம் கூறி எம்ஜிஆருடன் பேச்சு வார்த்தை நடந்தது தான் தவிர இறுதி கட்டத்தில் இல்லை.

தவறான தகவலை சொல்லி வருகிறார். துரைமுருகன் அதிமுகவை திமுகவுடன் இணைப்பதற்கு எம் ஜி ஆர் முயற்சி செய்தார். இது முழு பூசணிக்காவை சோற்றில் மறைப்பதற்கான சம்பவம் அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை. அதிமுக ஆரம்பத்தில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டபோது , திமுக நிர்வாகிகள் கலைஞரிடம் கூறி எம்ஜிஆருடன் பேச்சு வார்த்தை நடந்தது தான் தவிர இறுதி கட்டத்தில் இல்லை.
அதிமுக பாஜக கூட்டணி குறித்து நயினார் நாகேந்திரன் அவர் அவர் கருத்தை கூறுகிறார்.

எங்கள் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறினாரா????
அதிமுகவுடன் கூட்டணிக்கு வரும் கட்சிகள் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ள வேண்டும் அதிமுக ஆட்சி அமைப்பதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியில் இருந்து நாங்கள் விலகி விட்டோம் தற்போது நயினார் நாகேந்திரன் கூறுகிறார் என்றால் அது அவருடைய கருத்து இவ்வாறு கூறினார் முன்னாள் சேர்மன் பரவை ராஜா மற்றும் அதிமுக நிர்வாகிகள் உட்பட பலர் அருகில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.